Showing posts with label திக்கோடை. Show all posts
Showing posts with label திக்கோடை. Show all posts

24 Jun 2018

வறிய  மாணவர்களுக்கான  துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு - மட் /பட்/ திக்கோடை கணேச  மகா வித்தியாலயம்

வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு - மட் /பட்/ திக்கோடை கணேச மகா வித்தியாலயம்

'அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

என்பதற்கிணங்க வறிய  மாணவர்களின் கல்வி நலனை  மேம்படுத்தும் நோக்கில் சுவாமி விபுலானந்தர் சமூக  மேம்பாட்டு அமைப்பின் ஸ்தாபர் க. யோகநாதன் அவர்களின் ஏற்பாட்டில் காசிப்பிள்ளை நலிவுற்றோர் நலன்புரிச் சங்க நிதி உதவி மூலம் மட்/ திக்கோடை கணேச மகா வித்தியாலய  மாணவர்கள் மூவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் சி. தவநிதி, க.யோகநாதன், பாலகுமார், பாலசிங்கம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.