Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

15 Aug 2020

பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அவருடைய மகன் சரண் வெளியிட்டுள்ளார்.

பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அவருடைய மகன் சரண் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

1 Mar 2019

கோர்ட்டுக்கு இழுக்கப்பட்ட அட்லீ

கோர்ட்டுக்கு இழுக்கப்பட்ட அட்லீ

அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ படம் ‘மூன்று முகம்’ படத்தின் தழுவல்தான் என்று அடித்து கூறுகிறார் அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கும் பைவ் ஸ்டார் கதிரேசன்.

23 Dec 2016

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் யுவதிகளுக்கு 200 பேருக்கு அரச நியமனங்கள்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் யுவதிகளுக்கு 200 பேருக்கு அரச நியமனங்கள்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் யுவதிகளுக்கு இன்று காலை திருகோணமலை விவேகானந்தா மகாவித்தியாலய மண்டபத்தில்

5 Mar 2015

நான் யாரையும் காதலிக்கவில்லை

நான் யாரையும் காதலிக்கவில்லை

‘வாகை சூடவா’ படம் மூலம் இனியா பிர பலமானார். இதில் அவர் பாடிய சரசர சாரக்காற்று பாடல் விருதுகளை குவித்தது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வில்லியாக வந்தார். தற்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘காதல் சொல்ல நேரம் இல்லை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இனியா காதல் வலையில் விழுந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் செய்திகள் பரவின. இதுகுறித்து இனியா அளித்த பேட்டி வருமாறு:–

நான் தற்போது நடித்து வரும் படங்களில் நல்ல கேரக்டர்கள் அமைந்துள்ளன. ‘காதல் சொல்ல நேரம்’ இல்லை படம் காமெடி கதையம்சத்தில் தயாராகிறது. பழைய காதலிக்க நேரமில்லை படம் போல் இது இருக்கும்.

‘வாகை சூடவா’ படத்துக்கு பிறகு சினிமாவில் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு முன் வேறு பெயரில் நடித்தேன். ‘வாகை சூடவா’ படத்தில் டைரக்டர் சற்குணம் எனக்கு இனியா என பெயர் வைத்தார். ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தின் கதை மிகவும் பிடித்தது. இதில் என்னுடன் நீதுசந்துரா, சுஜா வாரினி போன்றோரும் நடிக்கின்றனர்.

உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது இல்லை. விரும்பியதை சாப்பிடுவேன். நடனம் ஆடி எடையை குறைக்கிறேன். இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். விஜய்யுடன் நடிக்க ஆசை உள்ளது.  இவ்வாறு இனியா கூறினார்.

20 Feb 2015

இனி குட்டை பாவாடை அணிய மாட்டேன்

இனி குட்டை பாவாடை அணிய மாட்டேன்

பொது விழாக்களில் குட்டை பாவாடை மற்றும் கவர்ச்சி உடைகள் அணிய மாட்டேன் என்று அனுஷ்கா கூறினார்.

இது குறித்து ஐதராபாத்தில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:– சினிமாவில் உடுத்தும் ஆடைகளை நிஜ வாழ்க்கையில் நான் அணிய மாட்டேன். இதை ஒரு கொள்கையாகவே வைத்து இருக்கிறேன்.

தெலுங்கில் சூப்பர் என்ற படத்தில்தான் அறிமுகமானேன். படப்பிடிப்பில் என்னிடம் ஒரு ஆடையை கொடுத்து அணிய சொன்னார்கள். அதை விரித்து பார்த்த போது குட்டை பாவாடையாக இருந்தது. நான் அதிர்ச்சியானேன். இதையா அணிய வேண்டும் என்று கேட்டேன். ஆமாம் கதைப்படி உங்கள் கேரக்டருக்கு இந்த ஆடை தான் உடுத்திக்கனும் என்றனர். வேறு வழியின்றி உடுத்திக் கொண்டு நடித்தேன். வீட்டில் உள்ளவர்கள் ஏன் இப்படியெல்லாம் நடிக்கிறாய் என்று கோபப்பட்டனர்.

சினிமாவில் கதை என்ன கேட்கிறதோ அதை செய்ய வேண்டும். கவர்ச்சி ஆடை அவசியம் என்றால் அதை உடுத்திக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் வேறு மாதிரி இருக்கிறேன். சினிமா அனுஷ்காவை நிஜவாழ்க்கையில் பார்க்க முடியாது. பட விழாக்கள் பொது விழாக்களுக்கு கலாச்சார முறைப்படி ஆடைகள் அணிந்து செல்கிறேன். சினிமாவில் உடுத்துவது போன்ற குட்டை பாவாடை, கவர்ச்சி உடைகளை அணிய மாட்டேன். இவ்வாறு அனுஷ்கா கூறினா