Showing posts with label கல்லடி-டச்பார் புனித இஞ்ஞாசியார். Show all posts
Showing posts with label கல்லடி-டச்பார் புனித இஞ்ஞாசியார். Show all posts

4 Aug 2019

புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழா - கொடியிறக்கத்துடன் நிறைவு

புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழா - கொடியிறக்கத்துடன் நிறைவு

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பாதுகாவலராம் கல்லடி-டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய 103 ஆவது ஆண்டுத் திருவிழா இன்று (04) கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

கடந்த 26.07.2019 ஆந் திகதி பங்குத்தந்தை இயேசு சபைத் துறவி அருட்பணி சுவைக்கீன் ரொசான் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஒன்பது நவநாட்கள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நேற்று 03.08.2019 சனிக்கிழமை புனிதரின் திருவுருவப் பவனியும் நற்கருணை ஆராதனையும் ஆசீரும் இடம்பெற்று, இன்று (04) ஞாயிற்றுக்கிழமை திருவிழா திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற்றது. இத்திருவிழா நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட இயேசு சபை மேலாளர் அருட்தந்தை நிக்ஸன் ரொசைரோ அடிகளார் உள்ளிட்ட அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் துறவிகள் பங்குமக்கள், அயல்பங்கு மக்கலென பெருந்திரளானோர் கலந்துகொண்டு புனிதரின் ஆசியினை பெற்றுக்கொண்டனர்.