3 Feb 2025

பிரதேச செயலாளர்கள் பிற இடங்களுக்கு மாற்றம்.

SHARE

 (.எச்.ஹுஸைன்)

பிரதேச  செயலாளர்கள் பிற இடங்களுக்கு மாற்றம்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலாளராகப் பணியாற்றி வந்த விநிஹாறா காத்தான்குடிப் பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்று திங்கள் 03.02.2025 முதல் கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.

இதேவேளைகாத்தான்குடிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த யூஉதயசிறீதர்களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக கடமையாற்றும் வண்ணம் இடமாற்றும் வழங்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த சிவப்பிரியா வில்வரெட்ணம்இப்பொழுது மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகப் கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.

மேலும்கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.எச்முஸம்மில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளராக கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.

கோறளைப்பற்று மத்தி உதவிப் பிரதேச செயலாளராக இதுவரை கடமையாற்றி வந்த எம்..சிறமீஷா பதவி உயர்வு பெற்று அந்தப் பிரிவின் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கடமைப் பிரதேச மாறுதல்கள்,  வழமையான வருடாந்திர இடமாற்றத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையேஏறாவூர் பிரதேச செயலாளராகப் பணியாற்றி தற்போது காத்தான்குடி பிரதேச செயலாளராகப் கடமைப் பொறுப்பேற்றுள்ள நிஹாறாவுக்கான சேவைப் பாராட்டும் பிரியாவிடையும் கௌரவிப்பும் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் ஞாயிறு 02.02.2025  இரவு இடம்பெற்றது.

மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்நழீம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அதிகாரிகளும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில்கொரோனா வைரஸ்உயிர்க் கொல்லி நோய்த் தொற்றுத் தாக்கம்பொருளாதார அரசியல் நெருக்கடிகள்மக்கள் ஆட்சி மாற்றப் போராட்டம் உட்பட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கன மழைவெள்ளம் போன்ற இயற்கை செயற்கை இடர்பாடுகளில் அர்ப்பணித்துச் சேவையாற்றியமையை சிலாகித்து நாடாளுமன்ற உறுப்பினர் நழீம் உட்பட இன்னும் அதிகாரிகளும் ஊர்ப்பிரமுகர்களும் கருத்துத் தெரிவித்தனர்.

அங்குபிரதேச செயலாளர் நிஹாறா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு நினைவுச் சின்னமும் அவருக்கு வழங்கபப்பட்டது.

இந்நிகழ்வில்ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச்முஸம்மில்கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்..சிறமீஷா,  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி  உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஆர்ஷியாஹ{ல் ஹக்ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எச்.எம்.எம்ஹமீம்ஏறாவூர் நகர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷாபிறா வஸீம் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்












 

SHARE

Author: verified_user

0 Comments: