மட்டக்களப்பு மாவட்டத்தின் தொடர்ச்சியாக கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக திங்கட்கிழமை(03.01.2025) மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்தில் புதிய அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாக விளங்கும் இலஞ்ச ஊழல் அற்ற சேவையினை மக்களுக்கு வழங்கும் முகமாக மாநகர சபை இலஞ்ச ஊழல் அற்ற பாதை எனும் திறப்பு விழா நிகழ்வு அலுவலகத்தில் இதன்போது இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து மாநகர சபையினால் முன்னெடுக்கும் மக்கள் பணிகளை சகலரும் வெளிப்படையாக அறியும் வகையில் மாநகர சபையின் செய்தி இணையத்தளம் புதுப்பிக்கப்பட்டு இதன்பேபு திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.தனஞ்ஞயன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் கலந்து கொண்டிருந்தார்.
இதேவேளை நகரில் உள்ள மக்களின் சுகாதார நலனைக் கொண்டு மாநகர சபையில் முதல் தடவையாக நகரின் பிரதான இடங்களில் வீதிகளில் பொதுமக்கள் கழிவுகளை வீசுவதைக் கண்டுபிடிக்கும் முகமாக திருமலை வீதி மற்றும் சத்துருக்கொண்டான் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment