9 Jan 2025

கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டத்தின் கீழ் உண்மையிலேயே மன அழுக்குகள் சுத்தப்படுத்தப்பட்டால் தான் நாங்களும், எங்களுடைய சூழலும் சுத்தமாக அமையும் - பிரதேச செயலாளர் ரங்கநாதன்.

SHARE

கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டத்தின் கீழ் உண்மையிலேயே மன அழுக்குகள் சுத்தப்படுத்தப்பட்டால் தான் நாங்களும், எங்களுடைய சூழலும் சுத்தமாக அமையும் - பிரதேச செயலாளர் ரங்கநாதன்.

நாட்டில் புதிதாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற இந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டத்தின் கீழ் உண்மையிலேயே மன அழுக்குகள் சுத்தப்படுத்தப்பட்டால் தான் நாங்கள் சுத்தமாகவும் எங்கள் சூழல் சுத்தமாகவும் அமையும். என போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கராதன் தெரிவித்துள்ளார். 

சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போரதீவு பற்று  பிரதேச செயலகமும் கதிரவன் மாற்று திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்திய மாற்றுத் திறனாளிகளுக்கும்,மாற்று திறனாளிகள் குடும்ப மாணவருக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை  (08.01.2025) வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது  அவர் மேலும் தெரிவிக்கையில் 

சமூகத்தின் உடல் ஊனமென சொல்லப்படுகின்ற விசேட தேவை உடையவர்கள் எவ்வாறு கவனிக்கப்பட வேண்டியவர்களோ அவ்வாறே மனம் ஊனம் உடையவர்களையும் கவனிக்கப்பட வேண்டும். மனம் ஊனம் உடையவர்களால்தான் அதிகளவு பிரச்சனைகள் சமூகத்திற்குள் வருகின்றன. 

உதாரணமாக நாட்டில் புதிதாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற இந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் உண்மையிலேயே மன அழுக்குகள் சுத்தப்படுத்தப்பட்டால்தான் நாங்கள் சுத்தமாகவும் எங்கள் சூழல் சுத்தமாகவும் அமையும். 

வீட்டிலே இருக்கின்ற கழிவுகளை மூட்டைகளை கட்டிக்கொண்டு வீதி ஓரங்களில் கொட்டி விட்டு செல்கின்றார்கள் வீடு கிளீன் செய்யப்பட்டுள்ளது ஆனால் மனம் கிளீன் செய்யப்படவில்லை

எனவே நாங்கள் சுத்தமாக வேணும், எங்களுடைய வீடு சுத்தமாக வேண்டும், எங்களுடைய சூழல் சுத்தமாக வேண்டும் சூழலிலே குப்பைகளை போடுகின்றவர்கள் குப்பைகளைப் போடுகின்ற எண்ணம் உடையவர்களாகவே தான் இருப்பார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்..

கதிரவன் மாற்று திறனாளிகள் அமைப்பின் தலைவர் ம.சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், போரதீவு பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், போரதீவு பற்று பிரதேச சபை செயலாளர் பகிரதன அகிலன் பௌண்டேசன் அமைப்பின் இலங்கை நாட்டுக்கான இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன், வன்னி ஹோப் நிறுவனத்தின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மாற்று திறனாளிகளுக்கு நுளம்புவலை, வெட்சீட், உள்ளிட்ட பாவனைப் பொருட்களும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும், இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன் மாற்றுத்திறனாளிகளால் கலை நிகழ்வுகளும் ஆற்றுகை செய்யப்பட்டன.

 













 

SHARE

Author: verified_user

0 Comments: