கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உறுப்பினர்களில் தமிழர்கள் உள்வாங்கப்படாமை வேதனையான விடையமாகும்-சிறிநேசன் எம்.பி
வியாழக்கிழமை(16.01.2025) மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்...
கிளீன் ஸ்ரீலங்கா என்பது சிறிய விடயங்களில்
கவனம் செலுத்தாமல் இலஞ்சம் ஊழல் அதிகார துஷ்பிரயோகம், ஆட்கடத்தல், கொலைகள், மனித குலத்திற்கு
எதிரான செயற்பாடுகள், என்பவற்றை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் இந்த கிளின் சிறிலங்கா
திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது
எதிர்பார்ப்பு.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பல செயற்பாடுகளை இந்த கிளீன் ஸ்ரீலங்கா தண்டிப்பதாக இருக்க வேண்டும். இந்த கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தில் நடை முறைப்படுத்தும் உறுப்பினர்களில் தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை என்பது ஒரு வேதனையான விடயம் இவ்வாறான குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாதம் மதவாதம் அற்ற செயற்பாடுகள் இந்த திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 75 ஆண்டுகள் புரையோடி போன இந்த விடயங்களை உடனடியாக தீர்ப்பது என்பது சாத்தியமற்ற விடயம். இருப்பினும் அரசாங்கம் பக்கச்சார்பின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய அரசாங்கத்தை மக்கள் ஓரளவு நம்புகின்றார்கள்
கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை தவிர்த்து செயல்பட்டால் இவர்களை தமிழ் மக்கள்
நம்புவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment