நாங்கள் அடாத்தாக காணியை பிடிக்கவில்லை – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலி கட்சி 10 ஏக்கருக்கு மேற்பட்ட காணியை பிடித்து வைத்துள்ளது என்றும் இது சட்டத்துக்கு முரணானது என்றும் கருத்துக்களை வெளியிட்டு மக்களையும், அதிகாரிகளையும் திசை திருப்பி குழப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார்.
உரிய காணிக்கான திட்ட முன்மொழிவுகள் கொடுக்கப்பட்டு அரசியல் கலாசார தலைமைத்துவ மத்திய நிலையத்திற்கான காணி மட்டக்களப்பு மட்டக்களப்பு திராய்மடுவில் பெறப்பட்டு இருக்கிறது.
என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மகாண சபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் வெள்ளிக்கிழை(03.01.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
75 வருடங்களாக செயல்படுகின்ற ஒரு இலங்கைத் தமிழரசுக் கட்சி மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான கருத்துக்களையும், தெளிவூட்டல்களையும், மேற்கொள்வதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 ஏக்கர் அல்ல 20 ஏக்கர் காணியினை நீண்ட கால குத்தகைக்குப் பெற்று மிகப் பிரமாண்டமான அலுவலகத்தை கட்டி மக்களுக்கு அரசியல் தொழில் செய்யுங்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்களை தெளிவூட்டுவதற்காக சட்டப்படியாக மூன்று ஏக்கர் காணியைப் இவ்வாறு அரசியல் கலாசார தலைமைத்துவ நிலையத்தை அமைப்பதற்காக முன்வந்தால் அதனை மாற்றி 10 ஏக்கர் காணியினை சூறையாடி இருக்கின்றார்கள் காணியைக் கொள்ளை அட்டிருக்கின்றார்கள் என மிகப் பொய்யான வதந்திகளை கூறி அதிகாரிகளையும் மக்களையும் திசை திருப்ப வேண்டாம். மக்களுக்காக ஏதாவது நல்ல விடயங்களை செய்யுங்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசியல் கலாசார தலைமைத்துவ மத்திய நிலையம் அமைத்த பிற்பாடு எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கின்ற உறுப்பினர்களளும் வந்து அங்கு இருக்கின்ற நூலகத்தை பயன்படுத்தலாம், அங்கு இருக்கின்ற மண்டபத்தை பயன்படுத்தலாம், முடிந்தால் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கிய ராகுல ராஜபுத்திரன் அவர்களும் வந்து செல்லலாம்.
எனவே நாம் காணினை அடாத்தாக பிடித்து இந்த மண்டபத்தை அமைக்கவில்லை. சட்டப்படி அதற்கான ஆவணங்கள் அனைத்தும் கச்சேரியிலும், பிரதேச செயலகத்திலும் இருக்கின்றது. அங்கு சென்று பரிசோதித்து பார்க்கலாம்.
இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதியும் கூறியிருக்கின்றார் நாட்டினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், ஊழல் நிர்வாகம் நடைபெற வேண்டும், உடனடியாக நிர்வாக சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என சொல்லி இருக்கின்றார். தற்போதும் அது தொடர்பான நடவடிக்கைகள் அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. அந்த அடிப்படையில் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் மக்களும் ஆணை வழங்குகின்றார்கள். அவர்கள் சிறந்த முறையில் திட்டங்களை முன்னெடுப்பார்கள்.
நாடு பொருளாதார ரீதியாக பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு
மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறான சூழலில் மக்களின் அடிப்படை
பிரச்சினையை தீர்த்து மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம். வறுமையில் இருக்கின்ற
மக்களை மீட்டெடுப்போம் என்ற அடிப்படையில்தான் நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க
அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருக்கின்றார். அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை
விட அதிகமாக பெரும்பான்மை கிடைத்திருக்கின்றது ஆகவே அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.
என நாம் எதிர்பார்க்கின்றோம். அவர் நிறைவேற்ற வேண்டும் மக்கள் அதற்காகத்தான் ஆணை வழங்கியிருக்கின்றார்கள்
என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment