5 Jan 2025

மட்டக்களப்பில் அதிகரிக்கும் முதலைகளின் நடமாட்டம்.

SHARE

 மட்டக்களப்பில் அதிகரிக்கும் முதலைகளின் நடமாட்டம்.                             

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வடகீழ் பருவப் பெற்சி மழைவீழ்;ச்சி ஓந்திருக்கின்ற இந்நிலையில் கிராமியக் குளங்கள் முற்றாக நீர் நிரம்பியுள்ளன. இந்நிலையில் அக்குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் மட்டக்களளப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிற்குட்பட்ட போரதீவு பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட  வெல்லாவெளிக் குளத்தில் முதலைகள் அதிகளவு நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த குளத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதகால் அக்குளத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளும் மீன் பிடியில் ஈடுபடுபவர்களும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்தின் முன்னால் அமைந்துள்ள வெல்லாவெளி குளத்தில் மாத்திரம் சுமார் 07 இற்கு மேற்பட்ட முதலைகள் அளவில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மட்டக்களப்பு வாவியிலிருந்து இவ்வாறு குளத்திற்கு முதலைகள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குளம் மக்கள் குடியிருப்பையும் அண்மித்துள்ளதானால் பொதுமக்களும், அப்பகுதியில் இரவு வேளைகளில் பயணம் செய்யும் பிரயாணிகளும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.











SHARE

Author: verified_user

0 Comments: