எல்.ஆர்.சி. காணி யார் யாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்பது ; அறிவிக்கப்படவில்லை பிள்ளையான்.
நான் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக மக்கள் ஆணையை பெற்று மக்களை நிர்வகித்து கொள்வர் என்ற அடிப்படையில் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற அடிப்படையில் எல்.ஆர்.சி. காணி இதுவரைக்கும் யார் யாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்பது ; அறிவிக்கப்படவில்லை.
என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் காணி
சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜை முன்னாள்
இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர் பதவியிலிருந்தபோது தன்னை அச்சுறுத்தியதாக
தொடுக்கப்பட்ட வழங்கிற்கு வெள்ளிக்கிழமை(10.01.2025) அஜராகிய பின்னர் ஊடகங்களுக்குக்
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம் நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணையாளராக இருக்கின்ற அவரை நான் அச்சுறுத்தியதாக ஒரு முறைப்பாடு செய்திருக்கின்றார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை நான் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று விளக்கமளித்திருந்தேன்.
எனக்கு இவ்வழக்குத் தொடர்பில் பொலிசரிடம் இருந்து எந்த விதமான அழைப்புகளும் வரவில்லை இதனால் நான் அந்த வழக்குக்கு ஒத்துழைப்பு வழங்க வில்லை என்பதை பொலிசார் தெரிந்தனர். பின்னர் என்னை வாக்குமூலம் வழங்கும்படி பொலிசார் கேட்டு இருந்தனர். அந்த வகையில்தான் நான் கடந்த திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்கு மூலமளித்திருந்தேன்.
இந்நிலையில் நீதி மன்ற அழைப்பாணையின்
பிரகாரம்தான் இன்று நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தேன். நான் நீதிமன்றில் இவ்வடையம்
தொடர்பில் தெளிவாகச் சொல்லி இருந்தேன்.; மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களுக்கு
1972 அம் ஆண்டு காணி சீர்திருத்த ஆணை குழு பரிபாலிக்கப்பட்டபோது மட்டக்களப்பிலே காணப்பட்ட
தனவந்தர்களிடமிருந்து காணி சுவீகரிக்கப்பட்டன. அதில் சிலவற்றை சாதாரண குடிமக்கள் பயன்படுத்தியதன்
காரணமாக குத்தகைகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன.
பலருக்கு இந்த காணிகளை விற்பதற்காக நிதிகளை பெற்றுக ;கொண்டு இலஞ்ச ஊழல் அடிப்படையில் சந்திவெளியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக காணப்படுகின்ற காணி அரசாங்கத்துக்கு உரிய காணியாக இருந்தது. இது அனைவருக்கும் தெரியும். அக்காணியில் சிவனிடம் சிலை உடன் கூடிய ஆலயமாக அமைப்பதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவர் ஒரு கோடி 60 இலட்சத்திற்கும் அந்த காணியை பெற்றுக் கொண்டார். அந்த காணியில் திருமந்திரங்களுடன் கூடிய ஆலயம் ஒன்றிய அமைப்பதற்கு என்பதை நான் அறிந்திருந்தேன். நான் அந்த ஆலய தர்மகத்தாவுடன் தொடர்பு கொண்டு இது அரசாங்கத்துக்கு சொந்தமான காணி இதனை எப்படி பெற்று கொண்டீர்கள் ஐயா என வினவியபோது அவர் எனக்கு விளக்கமளித்தார்.
அப்பொழுது நான் சொன்னேன் ஐய்யா இது எல்.ஆர்.சி.
காணி நீங்கள் பெற்றுக்கொண்ட காணியை மீள கொடுத்துவிட்டு உங்களுடைய நிதியை உரியவர்களிடம்
மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தேன்.
நான் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்
என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக மக்கள் ஆணையை பெற்று மக்களை நிர்வகித்து கொள்வர் என்ற
அடிப்படையில் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற அடிப்படையில் எல்.ஆர்.சி.
காணி இதுவரைக்கும் யார் யாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்பது ; அறிவிக்கப்படவில்லை.
இதனை வைத்துக் கொண்டுதான் இவ்வாறான பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தோம்.
உண்மையில் நான் நீதிபதி அவர்களிடம் இருந்து மகிழ்ச்சி அடைந்தேன். இதனை கூர்ந்து அவதானித்து 2019 ஆம் ஆண்டு பின்னர் நான் அளித்த வாக்குமூலத்தையும் சரியாக ஆராய்ந்து, இப்பொழுது புதிய அரசாங்கத்தின் ஊடாக லஞ்ச ஊழல் சம்பந்தமாக தீவிரமா விசாரிக்கப்படுவதோடு, லஞ்ச உழல் ஆணை குழுவுக்கும் இதனை வழங்குமாறும் உத்தரவு வழங்கியிருந்தார். அதில் நான் மகிழ்ச்சி அடைந்திருந்தேன்.
என்னை ஒரு கெட்டவராக காட்டி மக்களுக்கு
அரசியல் ரீதியாக சேவை வழங்குகின்ற ஒருவரை அடித்து தரம் குறைத்து தொடர்பிலும், இவ்வாறான
விடையங்களையும், ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்த வேண்டும்.
அடுத்த வழக்கு பெப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்ற நடைபெறும் அதற்கு நான் அவசியம் நீதிமன்றிற்கு வரவேண்டியதாக
இல்லாவிட்டாலும், வழக்க தொடர்பில் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது
என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment