1 Jan 2025

கிளீன் ஸ்ரீலங்கா களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.

SHARE

கிளீன் ஸ்ரீலங்கா களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.

கிளீன் ஸ்ரீலங்கா Clean Srilanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் 2025 ஆம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு. 

நாட்டினுள் நெறிமுறையிலான சுற்றாடல் மற்றும்  சமூக மாற்றமொன்றை ஏற்படுத்தி நாட்டின் தரப்படுத்தல் நோக்கங்களை முதன்மையாக கொண்டு அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள ஊடநயn ளுசடையமெய தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு புதன்கிழமை (2025.01.01) பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

பிரதேச செயலாளர் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அலுவலக உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், மும்மத அனுஷ்டானங்கள் இடம்பெற்று நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த  அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தேசிய விழாவுடன் இணைந்து கொண்ட பிரதேச செயலக பதவியணியினர், தொடர்ந்து அரச சேவை உறுதியுரையும்  மேற்கொண்டனர். 

பிரதேச செயலாளர் அவர்களினால் கிளீன் ஸ்ரீ லங்கா Clean Srilanka திட்டம் தொடர்பாகவும், அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் பற்றியும் அந்த குறிக்கொள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் சமூக, சுற்றாடல், நெறிமுறைகளில் Clean Srilanka தொடர்பாகவும் உரை நிகழ்த்தப்பட்டது. 

பிரதேச செயலக பிரிவினுள்  பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. 

கடந்த வருடம் தங்கள் கடமை செயற்பாடுகளில் சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்  தங்களது கடமைகளுக்கு அப்பால் சேவையாற்றிய உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர். 

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்யகௌரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  








SHARE

Author: verified_user

0 Comments: