பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையின் வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் எண்ணக்கருவில் தரமான கல்விக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கையிலுள்ள கல்வி வலயங்களில் முதலாவது முன்மாதிரியான கல்வி ஆய்வு மாநாடு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முதன் முதலாக களுவாஞ்சிக்குடி யில் நடைபெற்றது.
கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆய்வு மாநாட்டில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் கலந்து கொண்டார் . அத்துடன் காணி ஆணையாளர் வி.விமல்ராஜ், பேராசிரியர் வி.குணரெத்தினம், பேராசிரியர் எஸ்.சுதர்சன், கலாநிதி சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.அதிரதன், கலாநிதி முருகுதயாநிதி, கலாநிதி எஸ்.அமலநாதன் உட்பட பல்கலைக்கழ பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், துறைசார்ந்த கல்வியாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இங்கு மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கான
முன்மொழிவுகள், அதுசார்ந்த செயற்திட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்த கல்வியாளர்களினால்
ஆய்வுகள் சமர்பிக்கப்பட்டது. அத்துடன் கல்வி
ஆய்வு தொடர்பான நூல் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் அதன் முதற்பிரதியை கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வ.கனகசிங்கம் வலயக்
கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரனிடம் இருந்து பெற்றுக்கொண்டார். வரலாற்றில் பட்டிருப்பு
கல்வி வலயத்தில் முதற்தடவையாக இவ்வாறான கல்வி
ஆய்வு மாநாடு நடைபெற்றமையையிட்டு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
0 Comments:
Post a Comment