வடபகுதியில் இம்முறை தமிழரசு கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து இருக்கின்றது பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் ஆதங்கம்.
வடபகுதியில் இம்முறை தமிழரசு கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து இருக்கின்றது. அதற்கு என்ன காரணம் என்று அக்குவேறு, ஆணிவேறாக, ஆராய்ந்து பார்த்தால் அந்த இடத்தில் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக எமது சில முக்கியமான நபர்கள் அதிருப்தியின் காரணமாக கட்சியை விட்டு வெளியேறக் கூடிய நிலைமை காணப்பட்டது.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினனும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழi(24.12.2024) மாலை மட்டக்களப்பு குருமண்வெளியில் நடைபெற்ற அவருக்கான வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையிலே
பல நுட்பங்கள் காணப்படுகின்றன. அந்த நுட்பங்களை நாங்கள் வெற்றி பெறுவதாக இருந்தால்
தனித்துப் போட்டியிட்டு பின்னர் ஒன்றாக இணைந்து செயற்படுவது சிறந்ததாகும். கடந்த உள்ளுராட்சி
மன்றத் தேர்தலிலே கூட்டமைப்பாக இணைந்து போட்டியிட்டாலும்கூட பிரதேச சபைகளை முற்றாக
கைப்பற்றக்கூடிய அறுதிப் பெரும்பான்மை எமக்குக் கிடைத்திருக்கவில்லை. இதன் காரணமாக
தென்னிலங்கை சார்ந்த கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,
மற்றும் எமது கட்சியுடன் உடன்படாத சில கட்சிகளோடு இணைய வேண்டிய நிற்ப்பந்தங்கள் ஏற்பட்டிருந்தன.
அதன் காரணமாக உள்ளுராட்சி சபை தேர்தலில் இப்போது நாங்கள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக
போட்டியிடுவதைவிட பிரிந்து போட்டியிட்டு அதிகமான ஆசனங்களை கைப்பற்றிய பின்னர் தமிழ்த்
தேசிய உணர்வுகள் உள்ள கட்சிகள் ஒன்றாக இணைகின்ற போது நாங்கள் தென்னிலங்கை கட்சியுடன்
சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டிய தேவை ஏற்படாது.
எனவே கடந்த காலத்தில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில், தமிழ் தேசியக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு ஆசனங்களை கைப்பற்றி பின்னர் ஒன்றாக இணைவதற்கு அவர்கள் முற்பட வேண்டும். இணைந்து போட்டியிடுவதன் மூலமாக சில வேளைகளில் உள்ளுராட்சி மன்றத்தில் வரக்கூடிய ஆசனங்களைவிட குறைவான ஆசனங்களை பெறக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.
எமது கட்சி பாரம்பரியமான கட்சி என்ற அடிப்படையில் கருத்து சுதந்திரம் இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்கள் வாதப் பிரதிவாதங்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அந்த அடிப்படையில் எமது கட்சிக்குள் அடிக்கடி ஜனநாயக அடிப்படையில் செயற்படுகின்றபோது வாதப் பிரதிவாதங்கள் ஏற்படுவதை நான் மறக்கவில்லை. இருந்தாலும் இந்த வாதப் பிரதிவாதங்கள் என்பது அல்லது கருத்து ஒவ்வாமை என்பது தொடர்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காண வேண்டும். கடந்த காலத்தில் நாங்கள் எடுத்த முடிவுகள் சிலவற்றில் உடன்பாடுகள் இல்லாது முடிவுகள் காணப்படுகின்ற படியால் பொது வேட்பாளர் பற்றிய விடயத்திலும் உடன்பாடு இருக்கவில்லை. அந்த பொது வேட்பாளரை ஆதரிக்கக் கூடாது என்றும், ஆதரிக்க வேண்டும் என்றும், கூறியவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வெற்றி பெற்று இருக்கின்றார்கள் என்பதை அவதானித்தால் மக்கள் எந்த பக்கம் நிற்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது.
கடந்த தேர்தலில் உண்மையிலேயே யாழ் மாவட்டத்திலேயே ஒரு இலட்சத்துக்கு அதிகமான வாக்கை ஜனாதிபதி பொது வேட்பாளர் பெறக்கூடியதாக இருந்தது. பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அந்த வாக்கு 40 ஆயிரத்தால் குறைந்திருக்கின்றது. எனவே மக்கள் எந்த பக்கம் சிந்திக்கின்றார்கள் எந்தப் பக்கம் முடிவெடுக்க விரும்புகின்றார்கள் என்பதை அறிந்து நாங்கள் மக்களுக்கு ஏற்ற விதத்தில் கட்சி முடிவெடுக்கின்ற போது பின்டைவுகளையும், தோல்விகளையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பாக வடபகுதியில் இம்முறை தமிழரசு கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து இருக்கின்றது. அதற்கு என்ன காரணம் என்று அக்குவேறு, ஆணிவேறாக, ஆராய்ந்து பார்த்தால் அந்த இடத்தில் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக எமது சில முக்கியமான நபர்கள் அதிருப்தியின் காரணமாக கட்சியை விட்டு வெளியேறக் கூடிய நிலைமை காணப்பட்டது. அவ்வாறானவர்கள் தனித்துப் போட்டியிடக்கூடிய நிலைமை காணப்பட்டது. இதன் காரணமாக வாக்கு சிதறல்கள், சிதைவுகள் ஏற்பட்டு வடபகுதியில் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கின்றது. இப்படியான விடயங்கள் காரணமாகத்தான் மத்திய குழு கூட்டத்தின் போதும் வாத, பிரதிவாதங்கள் ஏற்படுகின்றன. இந்த விடயங்களை தெரிவிக்கின்ற போது நாங்கள் அடுத்த முடிவு தவறு அந்த தவறான முடிவை சரியாக்கி கொள்ளாவிட்டால் விடாக்கண்டர்கள், கொடாக்கண்டர்கள், என்பது போன்று பிடிவாதமாக நிற்கின்ற போது இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மக்கள் எங்களுக்கு பாடத்தை கற்பிக்கின்றார்கள் இவ்வாறு கற்பித்த பாடங்களை நாங்கள் படிப்பினையாக கொண்டு நாங்கள் திருந்த வேண்டும். இல்லையெனில் நான் பிடித்த முயலுக்குதான் மூன்று கால் என்று கொண்டு நாங்கள் நிற்போமாக இருந்தால் அதை நிச்சயமாக மீண்டும் மீண்டும் சறுக்கல்களையும் வழுக்கல்களையும் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு இருக்கும்.
எனவே மத்திய குழுவில் வாத பிரதிவாதங்கள்
நடைபெறுகின்றன மறுசீரமைப்பு என்ற விடயமும் தேவையாகத்தான் இருக்கின்றது. ஆனால் கருத்துரிமை
பாட்டின் அடிப்படையில் அந்த மறுசீரமைப்பு நடக்க வேண்டும்தேம தவிர பிளவுகளை ஏற்படுத்த
கூடிய விதத்தில் அந்த மறுசீரமைப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதை நான் தெளிவுபடுத்திக்
கொள்கின்றேன்.
0 Comments:
Post a Comment