கடந்த வெள்ள அடர்த்தத்தின் போது பெருமளவு பொலித்தீன் பிளாஸ்டிக் கொருட்கள் கரைஒதுங்கிய காரணத்தினால் நீர் வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சூழலை பாதுகாப்போம் என்னும் வேலை திட்டத்தின் கீழ் நோயற்ற வாழ்வை முன்னெடுக்கும் முகமாக இந்தத் தூய்மைப் படுத்தும் பணி மாவட்ட இளைஞர் சேவை உத்தியோஸ்த்தர் மா. சசிகுமாரின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மோளனம் தலைவர் எஸ்.சஜிவ் தலைமையில் மட்டக்களப்பு வாவிக்கரை பூங்காவில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இப்போது வெள்ளத்தினால் கரைஒதுங்கிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வாவி ஓரங்களில் இருந்து அகற்றப்பட்டன. இதுபோன்ற சிரமதான நிகழ்வுகள் மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருண்மொழி, மாவட்ட இளைஞர் சேவை உத்தியோத்தர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சிரமதானப் பணியானது மட்டக்களப்பு வாவிக்கரை பூங்காவில் ஆரம்பித்து மட்டக்களப்பு புதுப்பால சந்தியூடாக கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயம் வரை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது வெள்ளத்தினால் கரையொதுங்கிய பெருமளவான பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment