26 Dec 2024

மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதான தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதான தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு.

சுனாமி அர்த்தம் ஏற்பட்டு இருபது வருட நினைவு தின நிகழ்வு வியாழக்கிழமை(26.12.2024) மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நினைவு கூறப்பட்டன. 

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட செயலக  தேசிய பாதுகாப்பு தின பிரதான நிகழ்வு புதிய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.சியாத் தலைமையில்  இடம்பெற்றது. 

இதன் முதல் நிகழ்வாக  மாவட்ட அரசாங்க அதிபர் தேசியக்கொடி ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டதன் பின்பு  சுடர் ஏற்றி உயிரிழந்த உறவுகளுக்காக ஆத்மா சாந்தி வேண்டி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன.

பின்னர்  சுனாமி அர்த்தம் சம்பந்தமான மும்மத தலைவர்களின் ஆத்ம சாந்தி நினைவு பேருரைகளும்  இடம் பெற்றன.  சுனாமி நினைவு ஞாபகார்த்த உரைகள் இங்கு நிகழ்த்தப்பட்டன. 

இந்நிலையில் சுனாமி ஏற்பட்டு 20 ஆண்டுகள் நினைவு தின நிகழ்வுகள் இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இடம்பெற்றன. 

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.பிரணவன் மதத் தலைவர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் ஊழியர்கள், என பலரும் கலந்து சிறப்பித்தனர். 

கிழக்கு மாகாணத்தில் கடந்த சுனாமி அனர்த்தத்தினால் அதிகளவிலான உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டது மட்டக்களப்பு மாவட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: