21 Dec 2024

வெள்ளத்தால் பாதிப்புற்ற வீதிகளை செப்பனிடும் பணிகள் ஆரம்பம்.

SHARE

வெள்ளத்தால் பாதிப்புற்ற வீதிகளை செப்பனிடும் பணிகள் ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தினால் பாதிப்புற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பிரதான வீதிகளைச் புனரமைப்புச் செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு போரதீவு பிரதான வீதி, மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதி, வெல்லாவெளி திவுலானை வீதி, உள்ளிட்ட பல வீதிகள் வெள்ளத்தினால் பலத்த சேதங்களுக்குட்பட்டுள்ளன. நிலையில் அதனை சீர் செய்து திருத்தியமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.

இதனிடையில் வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியின்பெரும்பகுதி கடந்த வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புற்று மக்கள் பிரயாணம் செய்வதில் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்விதுp வெள்ளத்தில் அள்ளுண்டு அருகிலுள்ள வயல் நிலங்களுக்கு தூக்கி வீசப்பட்டுள்ளன.  

இவ்வாறு வெள்ளத்தில் அள்ளுண்டு பாதிப்புற்ற வீதிகளை புரனமைப்பும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை மிகவிரைவில் பூர்த்தி செய்து மக்களின் போக்குவரத்திற்கு ஏற்ப இலகுவாக போக்குவரத்தை மேற்கொள்ளக் கூடிய வகையில் வழிவமைத்துக் கொடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

















SHARE

Author: verified_user

0 Comments: