வட்டவளை அணைக்கடை அகலப்படுத்துமாறு விவசாய அமைப்பு கோரிக்கை.
இவ்வருடம் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் வயல் நிலங்களையும் ஆற்றுக் கட்டுக்களும் பெரிதாக பாதிப்புற்றிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் வரும் வெள்ளத்திலே இவ்வாறு பாதிப்புற்றாலும் இந்த வருடம் அதிக மழை காரணமாக பாரிய உடைப்புகள் வயல் நிலங்களில் ஏற்பட்டிருக்கின்றது.
என மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட ஆதவன் கமலநல அமைப்பின் தலைவர் சந்திரசேகரம் கருணைராஜன் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…..
நவகிரி குளத்திலிருந்து இரண்டு வான்கதவுகள் நான்கு அடி உயரத்தில் திறக்கபடும் போது அதிலிருந்து வெளியேறும் நீரை வெளியேற்றக்கூடிய அளவிற்கு வெல்லாவளி மண்டூர் பிரதான பாதை ஊடகச் செல்கின்ற அணைக்கட்டுகள் காணப்படுகின்றன. அதில் பிரதானமாக வட்டவளை அணைக்கட்டு ஆகும்; இந்த அணைக்கட்டினால் மாத்திரம் வெளியேறும் பாரிய அளவிலான வெள்ள நீர் ஒன்று சேர்ந்து மட்டக்களப்பு வாவியைச் சென்றடைவதற்கு இடவசதி போதாமலுள்ளது. வயல் நிலங்களையும் பாதித்துக் கொண்டு வெள்ள நீர் செல்வதானால் விவசாயச் செய்கை பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.
வட்டவளை அணைக்கடை அகலப்படுத்தினால் எதிர்காலத்தில் இந்த அணைக்கட்டு ஊடாகச் செல்லும் வெள்ள நீர் இலகுவான மட்டக்களப்பு வாவியைச் சென்றடையும். அப்போது இப்பகுதியில் பாரிய வெள்ள அனர்த்தங்களோ, விவசாய நிலங்கள் பாதிப்படைவது வெகுவாகக் குறைவடையும். என நாம் எதிர்பார்க்கின்றோம்.
இவ்வருடம் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால்
எமது பகுதியிலுள்ள வட்டவளை, ஓட்டடிமுன்மாரி, போன்ற பல்வேறு வயல் கண்டங்கள் உடைப்பெடுத்து
பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே வட்டவளை அணைக்கட்டை அகலப்படுத்தப்படுவதனால் எதிர்காலத்தில் விவசாயிளும், அப்பகுதி மக்களும் வெகுவாக நன்மையடையவர்கள்.
வட்டவளை அணைகட்டை அகலப்படுத்தினால் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டூர், சின்னவத்தை, வெல்லாவெளி, வேத்துசேனை, பலாசோலை போன்ற பிரதேசங்கள் அதிகளவில் வெள்ளப் பெருக்கில் பாதிப்புறும் நிலமையிலிருந்து வெகுவாகக் குறைவடையும். எனவே இதனைக் கரத்திற்கொண்டு, விவசாயத்திணைக்களம். நீர்பாசனத் திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், உள்ளிட்ட துறைசார்ந்தோர் இதனைக் கருத்திற் கொண்டு செயற்பட முன்வர வேண்டும் என நாம் கோரிக்கை முன்வைக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment