19 Dec 2024

றொட்டரிக் கழகத்தினால் நாவலடி மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு.

SHARE

றொட்டரிக் கழகத்தினால் நாவலடி மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு.

அண்மையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு றொட்டறிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையினால் பல்வேறுபட்ட மனிதாபிமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன இந்நிலையில் 

மாவட்டத்தில் வெள்ளத்தினால் பெரிதும் பாதிப்புற்ற மண்முனை வடக்குப் பிரதேசத்திற்குட்பட்ட நாவலடி கிராம மக்களுக்கு உலர் உணவுகளை வைத்துள்ளனர். 

றொட்டரிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையின் தலைவர் றொட்டரியன் எம்.ஜெகவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி கிராம சேவை உத்தியோகஸ்த்தல், மற்றும் றொட்டரிக் கழகத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலையில் இன்னலுறும் மக்களுக்கு தமது கழகம் முன்னின்று மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதுபோல் தற்போது மக்கள் எதிர்கொண்ட வெள்ள அனர்த்திற்கு தம்மதால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருவதோடு வருவதாக  றொட்டரிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையின் தலைவர் றொட்டரியன் எம்.ஜெகவண்ணன் இதன்போது தெரிவித்துள்ளார்.











SHARE

Author: verified_user

0 Comments: