ஆதரவற்ற குடும்பத்திற்கு உரியவேளையில் கைகொடுத்த பசுமை இல்லம்.
மட்டக்களக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு மத்தியில் குடும்பப் பெண் ஒருவர் சறுக்கி விழுந்து மரணித்துள்ளனர்.
அப்பெண்ணின் வீட்டுச் சூழல் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியபோதும், அவரின் இறுதிச் சடங்கை நடாத்துவதற்கு உரிய நிதிவசதிகள் இன்மையினால் அவர்களின் குடும்பம் மேலும் இன்னல்களுக்கு முககம் கொடுக்க நேரிட்டிருந்தது.
இதனையறிந்த பசுமை இல்லம் எனும் அவர்களின் குடும்பதிற்கு 65500 ரூபா நிதியை அன்பளிப்புச் செய்திருந்தது. இந்த நிதியை அவ்வமைப்பின் நிதியை பசுமை இல்லத்தின் கிழக்கு மாகாணத்தின் இணைப்பாளர் கோணேஸ் வழங்கி வைத்துள்ளார்.
இதற்குரிய நிதிஉதவியை சுவீஸ் நாட்டில் வசித்துவரும் நவநீதன் கவிதா குடும்பதினர் பசுமை இல்லத்தினூடாக வழங்கியிருந்தனர்.
தமது மேலும் நோய்யுற்றவர்கள் இருக்கின்ற
இந்நிலையில் எதுவித வருமானங்களும் இல்லாத நிலையில் வெள்ள அனர்த்த வேளையில் குடும்தில்
ஏற்பட்ட மரணச் சடங்கிற்காக நாம் கேட்கோமலேயே எமது காலடிக்கு வந்து 65500 ரூபா நிதியை
தந்துதவிய சுவீஸ் நாட்டில் வசித்துவரும் நவநீதன் கவிதா குடும்பதினருக்கும், பசுமை இல்லத்திற்கும்,
அதற்கு உறுதுணையாக இருந்த அவ்வமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் கோணேஸ் அவர்களுக்கும்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என உயிரிநை;த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment