29 Dec 2024

காட்டு யானைகளால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களை காவல் காக்கின்றோம்.

SHARE

காட்டு யானைகளால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களை காவல் காக்கின்றோம்.

காட்டு யானைகளால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களை காவல்காக்கின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின்;  மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரி.தியாகராசா தெரிவித்தார். 

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் சனிக்கிழமை (29.12.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் .... 

காட்டு யானைகளால் போரதீவுபற்று  பிரதேசத்தின் வேத்துசேனை, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை, பாலையடிவட்டை, போன்ற பல கிராமங்கள் தினமும் பாதிக்கப்படுகின்றன. 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு யானைவேலி அமைத்து தருமாறும், அப்பகுதியில் தங்கி இருக்கின்ற காட்டு யானைகளை அப்புறப்படுத்துமாறும், அல்லது காட்டு யானைகளை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு விடுமாறும், பலமுறை தெரிவித்தும் அவை இதுவரையில் நடைபெறவில்லை. 

தினமும் மக்களும் விவசாயிகளும் கால்நடைகளும் அவ்வப்போது காட்டு யானைகளால் காவு கொள்ளப்பட்டு உயிரிழக்க நேரிடுகின்றது. 

எதிர்வரும் மாதத்தில் எமது வேளாண்மைச் செய்கை அறுவடை செய்வதற்கு தயாராக உள்ள இந்த நிலையில் காட்டு யானைகளை தற்போது அப்புறப்படுத்த வில்லையெனில் வாழ்வாதார ரீதியாகவும் நாம் தொடர்ச்சியாக இம்முறையும் பாதிக்கப்படக்கூடிய துப்பாக்கி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடன் கருத்தில் கொண்டு காட்டு யானைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி யானைகள் சரணாலயத்தில் கொண்டு விடுமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். 

என்ன கருத்துதெரிவித்த தெரிவித்த அவர் .... 

வெல்லாவெளிப் பகுதியில் துர்ந்துபோயிருந்த வாய்க்கால் ஒன்று அகழப்பட்டு தற்போது இடைநடுவில் கைவிடபட்டுள்ளது. அந்த வாய்க்காலின் மிகுதி புனரமைப்பு வேலைகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் உள்ள பல நூற்று கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனை முற்றுமுழுதாக திருத்தியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கருத்து தெரிவித்தார்.








 

SHARE

Author: verified_user

0 Comments: