29 Dec 2024

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயப்பன் சந்நிதானத்தில் நடைபெற்ற மகரஜோதி பெருவிழா.

SHARE

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயப்பன் சந்நிதானத்தில் நடைபெற்ற மகரஜோதி பெருவிழா.

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் சந்னிதானத்தில் மகரஜோதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.12.2024) இடம்பெற்றது. 

அதிகாலை 5.45 மணிக்கு விசேட மகரஜோதிகிரியை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி, ஐயப்பனுக்கு விசேட அபிசேகம் இடம்பெற்று, பக்தி பூர்வமான பஜனை நிகழ்வு இடம்பெற்றது.  பின்னர் 18 படிப்பூசை இடம்பெற்றது. 

குருக்கள்மடம் செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்திலிருந்து ஐயப்பன் சந்நிதானம் வரையில் நடைபவனியாக ஆபரணம் எடுத்துவரும் நிகழ்வு  இடம்பெற்றது. தொடர்ந்து வன்புலி வாகனத்தில், எழுந்தருளிய ஐயப்பனுக்கு பக்தி பூர்வமான மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. 

ஐயப்பனின் கிரியை பூஜை நிகழ்வுகள் யாவும் தர்மசாஸ்தா புனித மாலை குழு குருசாமி ஜெசிந்திரா குரு தலைமையில், விஸ்வ பிரம்மஸ்ரீ செ.சுபேஸ்வரன் குருசுவாமி ஐயா, ஆலய பிரதம  செ.சிவகரன் குழுவினரால் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. 

இதப்போது பல ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.













SHARE

Author: verified_user

0 Comments: