குருமண்வெளி பொது நூலகத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் “குருமண்” சஞ்சிகை வெளியீடும்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் குருமண்வெளி பொது நூலகத்தால் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய வாசகர்களுக்கான பரிசளிப்பு விழாவும் “குருமண்” சஞ்சிகை வெளியீடும். வாசகர் வட்ட தலைவர் அருள் செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கிராம உத்தியோகத்தர் பா.ஜெகதீஸ்வரன்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைச் செயலாளர் சா.அறிவழகன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்
சி.குகநேசன் பொது நூலகர சீ.ரவீந்திரன், கவிஞர் அழகு தனு உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து
சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment