இயற்கை அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாக அரசாங்கத்திடம் கோரிக்கை.
இயற்கை அனர்த்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள கரையோர பிரதேச மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது உடமைகளும் சேதமடைந்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எதுவித வருமானமும் இன்றி தாம் கஷ்டப்படுவதாகவும் தங்களுக்குரிய நிவாரணங்களை வழங்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும் கடற் தொழிலாளர்கள் இந்த இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது மீன்வாடிகளும், மீன்பிடி உபகரணங்களும், பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன் மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் பாதுகாப்பாக மீனவர்களது தோணிகள், வள்ளங்கள், தற்போதும் கடல் பேரலையிலிருந்து காப்பாற்றும் முகமாக கட்டிவைக்கப்பட்டுள்ளதையும் காணக் கூடியதாக உள்ளது.
தொடர்ந்தும் கரையோர பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படுவதனால் மீனவர்கள் அதிக நாட்கள் தொழில் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு நிவாரணங்கள் வழங்க ஜனாதிபதி உதவி செய்ய வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடற்கரை பகுதிகள் தற்போது வெறுச்சோடி காணப்படுவதை காணக் கூடியதாக உள்ளது. அப்பகுதிகளில் மீனவர்களின் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் ஜீவராசிகள்கூட தற்போது உணவு இன்றி அலைந்து திரிவதை காணக் கூடியதாக உள்ளது.
வாடியில் மீன் பிடித்த மீனவர்கள் தற்போது விறகு தொழிலை முன்னெடுத்து வருகின்றனர். ஒருபகுதியில் சேதமுற்ற கடற்றொழில் உபகரணங்களையும் திருத்துவதையும் காணக் கூடியதாக உள்ளது.
மீனவர்கள் சுமார் பத்து வருடங்களுக்குப் பின்பு இவ்வாறான ஒரு அனர்த்தத்தை தாம் முகம் கொண்டுள்ளதாகவும் தற்போது கடன் எடுத்து தமது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களை தற்போதைய நிலையை உரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தமக்குரிய நிவாரண உதவிகளை வழங்குமாறு கோரிநிற்கின்றனர்.
கடல் கொந்தளிப்பு காரணமாக தாம் 15 நாட்களுக்கு
மேல் கடலில் கால் வைத்ததாகவும், இதனால் கரவலைள
மீன் மீன்பிடியாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள
தமக்கு அரசாங்கம் தங்களது நிலைமைகளை கருத்திறல் கொண்டு தமக்குரிய உதவிகளை வழங்குமாறு
இயற்கை அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட கரையோர மீன்பிடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment