சஜித் பிரேமதாஸவைப் பிரதமராக்குவதன் மூலம் தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் -வேட்பாளர் சந்திரகுமார்.
எமது இனத்திற்குரிய தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக சஜித் பிரேமதாசா அவர்களின் கட்சியை ஆதரிக்க வேண்டும். இம்முறை அவரை பிரதமராக்குவதன் மூலம் தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் இதனை எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வெட்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு துறைநீலாவணையில் அவரது தேர்தல்பரப்புரைக் காரியாலயம் ஒன்று வியாழக்கிழமை(31.10.2024) மாலை திறந்து வைக்கப்பட்டது. இதன்போத கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்….
கடந்த காலத்தில் நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக இருந்தபோது துறைநீலாவணைக் கிராமத்திற்கு 7 அரைக் கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பல வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டன. ஏனைய அரசியல்வாதிகளை போல் நான் அபிவிருத்திப் பணிகளுக்காக கல் நடுவதற்கோ, திறப்பு விழா செய்வதற்கோ, வருவதில்லை அபிவிருத்தி பணிகளை செய்து மக்களிடம் ஒப்படைத்து விட்டாலே போதும் என நினைப்பவர்தான் நான்.
பட்டிருப்புத் தொகுதிக்கு மாத்திரம் 1200 கோடிக்கு மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பல அபிவிருத்திகளை செய்துள்ளேன். கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்ற இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இருந்தார்கள் அவர்களைப்பற்றி மக்களிடம் கேட்டால் இலஞ்சம் ஊழல் என்றுதான் தெரிவிக்கின்றார்கள். மாறாக அவர்கள் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் என்ன மக்களுக்கு செய்தார்கள் என்று மக்கள் கேட்கின்றார்கள். அமைச்சர் ஒருவர் எவ்வாறு இருக்கக் கூடாதோ அவ்வாறேதான் அவர்கள் நடந்துள்ளார்கள் இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சீரழித்து விட்டு சென்றுள்ளார்கள்.
தற்போது நாட்டில் புதிதாக பொறுப்பேற்று இருக்கின்ற ஜனாதிபதி இலஞ்சம் ஊழல் செய்தவர்களை கைது செய்வோம் என தெரிவித்திருந்தார். மட்டக்களப்பில் ஆயுத குழுக்களிடம், இருக்கின்ற ஆயுதங்களை கழைவேன் என தெரிவித்திருந்தார், ஆனாலும் அரசாங்கம் வந்து எதுவித வேலைகளையும் செய்ததாக எமக்குத் தெரியவில்லை. அண்மையில் நடைபெற்று முடிந்த பிரதேச சபை தேர்தலிலும் கூட 70 வீத வாக்குகளை பெறுவோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதிலும் கூட அவ்வாறு அவர்கள் பெற்றதில்லை.
இந்த அரசாங்கத்தை கொண்டு வந்து நாங்கள் பிழை விட்டு விட்டோமோ என சிங்கள மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முந்திய ஜனாதிபதி தேர்தலிலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசா அவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள் சஜித் பிரேமதாஸ அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் ஒரே கருத்தையைத்தான் தெரிவித்து வந்தார் மாகாணசபையை நடைமுறைப்படுத்துவேன், எனவும் தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வை தருவேன், எனவும் கூறிய தலைவர் சஜித் பிரேமதாசா மாத்திரம்தான்.
தற்போது வந்திருக்கின்ற அரசாங்கம் நீடிக்குமா இல்லையா என மக்கள் சிந்திக்க துவங்கியுள்ளனர். சிங்கள மக்களின் பிரச்சினைகள் வேறு தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு. காலகாலமாக நாம் பல போராளிகளையும் சொத்துக்களையும் நாம் இழந்து பயணிக்கின்றோம். எமது தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் அது சஜித் பிரேமதாசாவினால் மாத்திரம்தான் முடியும். எமது இனத்திற்குரிய தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக சஜித் பிரேமதாசா அவர்களின் கட்சியை ஆதரிக்க வேண்டும். இம்முறை அவரை பிரதமராக்குவதன் மூலம் தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் இதனை எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இலஞ்சம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும். மட்டக்களப்பில் நடந்த ஊழல் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும். அதனை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கையில் ஊழல் இல்லாமலாக்கப்படல் வேண்டும். எனவே மக்கள் எதிர்காலம் கருதி செயற்பட வேண்டும் பாராளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யும் போது சிறந்த நபர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
நான் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமல் அமைப்பாளராக இருந்து கொண்டு இவ்வளவு பெரிய வேலைகளை செய்துள்ளேன.; மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற 10 பிரதேச செயலகங்களுக்கு அபிவிருத்தி குழு இணை தலைவராக இருந்துள்ளேன். அக்காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2400 கோடிக்கு மேற்பட்ட .அபிவிருத் திட்டங்களை கொண்டுவர முடிந்தது. ஒரு அமைச்சரால் செய்ய முடியாததை நான் செய்துள்ளேன். பிரதேச சபையில் ஒரு அங்கத்துவரைப்பெற முடியாதவர்கள்கூட தற்போது சுயேட்சைக் குழுக்களாக போட்டியிடுகின்றார்கள்.
துறைநீலாவணைக் கிராமம் தேசியத்திற்காக பல அர்ப்பணிப்புகளை செய்த கிராமம், ஆனால் தேசியம் தேசியம் என்ற கதைத்துக் கொண்டிருந்த நிலையில் அது தொடர்பில் ஒன்றும் இயலாமல் போகும் என்பதை உணர்ந்து மக்கள் அபிவிருத்தி நோக்கி சிந்திக்க துவங்கியுள்ளனர்.
தமிழ் தேசியத்தை உடைத்து சங்கு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது அதாடர்பில் தமிழ் உணர்வாளர்களை அமைப்பின் தலைவர் மோகன் அண்மையில் சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருந்தார் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு சுயேட்சை குழுவாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதனால் அவரோடு இணைந்து ஊழல் செய்த நபர்களை அவர் தற்போது கோபத்தில் வெளியிட்டு வருகின்றார்.
ஒருவர் முன்மொழிகளிலும் பாராளுமன்றத்தில் பேசுவதால்; மக்களுக்கு அபிவிருத்திப் பணிகள் நடைபெறப் போவதில்லை. ஒருவருக்கு வேலை வாய்ப்பு வரப்போவதில்லை, அவர்களை அவர்கள் சுயமாக வளர்த்துக் கொண்டுள்ளார்கள். தற்போது தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டுள்ளது. இதனை எமது மக்கள் உணர்ந்து எது நடந்தாலும் எமக்கு அபிவிருத்தி என்ற தேவை இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தின் ஆட்சி அமைப்பதற்கு உந்து சக்தி அளிப்பதற்கு மக்கள் உதவ வேண்டும்.
சில அமைச்சர்கள் அவர்களுக்கு தேவையான சொத்துக்களை வெளிநாட்டுகளிலும் சேகரித்து விட்டு பெயரளவில்தான் செயற்பட்டு வந்தார்கள். எனது பெயரில் எதுமித இலஞ்சமோ ஊழலோ காணிகளை கைப்பற்றிய விடயங்களோ, எந்த கொலை மிரட்டல்களோ, எந்த அவப்பெயர்களும் எனக்கு இதுவரை இல்லை. அவ்வாறு சந்தேகம் என்றால் ஊடகங்களுக்கு முன்னால் என்னை வைத்து மக்கள் கேள்வி கேட்கலாம். நாங்கள் அபிவிருத்தி பணியை செய்து விட்டுதான் மக்களிடம் வாக்குகளை கேட்கின்றோம். அதனை மக்கள் உணர்ந்து எம்மை ஆதரிப்பார்கள் என நான் நினைக்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment