நாமெல்லாம் அரசியல் பேச முடியாத காலமும் இருந்தது, அந்த வேளையில் யாழ்ப்பாணத்தில் இருந்து படையெடுத்து வருபவர்கள் தேர்தல் முடிந்ததும் சென்று விடுவார்கள் ஆனால் தற்போது அப்படியல்லா நாமெல்லாம் அரசியல் பேசும் நிலையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதன் தலைவரும் உருவாக்கி கொடுத்துள்ளார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளருமாகிய சண்முகலிங்கம் சுரேஸ்குமார் நேற்று கல்குடா தேர்தல் தொகுதியில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இம்முறை போட்டியிடும் பிரபல வர்த்தகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞரணி செயலாளருமாகிய சண்முகலிங்கம் சுரேஸ்குமாருக்கு மட்டக்களப்பு மாவட்ட மாவட்டத்தின் மூன்று தொகுதியிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொது மக்கள் என பலரையும் சந்தித்து வரும் நிலையில் கோரகல்லிமடு, பாலையடித்தோனா மற்றும் கிரான் பிரதேச மக்களையும் சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று நாம் ஊர் ஊராக அரசியல் கதைக்கின்றோம் என்றால் அந்த அரசியலை கொண்டு வந்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதன் தலைவர் பிள்ளையானுமே காரணம்.
அவர் இல்லையென்றால் இன்று எம்மால் அரசியல் பேச முடியுமாக இருந்திருக்குமா? நீங்களோ நானோ இன்று அரசியல் பேசியிருப்போமா? ஒரு காலத்தில் சொல்லின் செல்வன் இராஜதுரை, தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றவர்கள் இருக்கும் போது நாமெல்லாம் அரசியல் பேசவே ஏலாது, யாழ்ப்பாணத்தில் இருந்து படையெடுத்து வருவார்கள், தேர்தல் முடிந்ததும் சென்றுவிடுவார்கள்.
அதில் இராஜதுரை ஐயா மட்டும் மிஞ்சியிருந்து கொஞ்சம் பேரை வைத்துக் கொண்டு அரசியல் செய்வார். பின்னர் அவரையும் கட்சியில் இருந்து வெளியேற்றிய பெருமை தமிழரசுக் கட்சியையேசாரும். மட்டக்களப்பான் ஒரு அரசியல் தலைமைத்துவத்திற்கு வந்து விட கூடாது என்பதற்காகவே அவர்கள் அதை செய்தார்கள்.
மக்களாகிய நீங்கள் யோசியுங்கள், நமக்கென்று நமது மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கென்று ஒரு சொந்த கட்சி இருக்கென்றால், அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதன் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனையுமே சாரும். எனவே எமது கட்சியின் படகுச் சின்னத்திற்கும் உங்களுக்கு பிடித்தவர்கள் மூவருக்கும் உங்களது விருப்பு வாக்கினையும் அளியுங்கள் என கேட்டுக்கொண்டார்.
0 Comments:
Post a Comment