தேசியத்தின்பால் தடம் புரளாத தடம் மாறாத புத்திஜீளை மக்கள்; தெரிவு செய்யலாம் - இ.த.அ.கட்சி மு.கி.மா.உறுப்பினர் நடராசா.
கடந்த காலங்களை விட தமிழரசிக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நல்ல திருப்தியோடு மக்கள் இருக்கின்றார்கள். அதனை களத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இருந்தபோதிலும், தங்களுக்கான விருப்புகளை தெரிவு செய்கின்ற அடிப்படையில் நிச்சயமாக நாங்கள் சிறந்தவர்களை எதிர்பார்க்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணளவாக மூன்று உறுப்பினர்களை நாங்கள் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மக்களிடம் கூறிக்கொள்வது நாங்கள் மூன்று உறுப்பினர்களை எமது கட்சியிலே ஆளுமை உள்ள அதிகாரங்களை கேட்டு பெறக்கூடிய தமிழ் தேசியத்தின்பால் தடம் புரளாத, தடம் மாறாத, புத்திஜீளை மக்கள்; தெரிவு செய்யலாம்.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கோட்டைக்கல்லாறு வட்டாரத் தலைவருமான மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசன் அவர்களின் செட்டிபாளையத்தில் அமைந்துள்ள இல்லத்தில் வியாழக்கிழமை(31.04.2024) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
நானும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேந்திரன் அவர்களும் தனிப்பட்ட முறையில் எமது கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் சிறுநேசன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக அண்மையிலே ஒரு செய்தியை பார்த்தேன். உண்மையில் நாம் தமிழரசிக் கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் உண்மையை உரைத்து கூற வேண்டிய கடப்பாடு இந்த காலகட்டத்தில் எமக்கு தேவை. அதன் அடிப்படையில் நாங்கள் களத்தில் நின்று மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றோம். ஏnனினில் எமது கட்சி அழிக்கப்படக்கூடாது தமிழர்களுக்கான உரிமைகளை பெறுவதற்காக அன்று தொடக்கம் இன்றுவரை நல்ல வழியில் செயல்படுகின்ற கட்சி அடிப்படையில், எமது செயற்பாட்மை விடுவிக்கவும், எவரும் தண்டிக்கவும் கண்டிக்கவும் முடியாது.
நாங்கள் மாற்றுக் கட்சிக்கோ, சிங்கள கட்சிக்கோ, ஆதரவு தெரிவிக்கவில்லை. கடந்த கால சில சம்பவங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாங்கள் தமிழ் தேசியத்துக்குதான் மக்களை வாக்களிக்குமாறு கோருகின்றோமே தவிர மாற்று சிங்கள கட்சிகளுக்கு நாங்கள் வாக்கு கேட்டு போகவில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளதர்கள். உண்மையிலேயே நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே நல்ல வேட்பாளர்கள் இருக்கிறார்கள் அதனை மக்கள் பரிசீலனை செய்து யாரை தெரிவு செய்யலாம், யாரை தெரிவு செய்யாமல் விடலாம் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டிய கடமை இருக்கிறது.
நல்ல சேவை செய்யக்கூடிய, திறமையான தமிழ் தேசியத்தை தமிழ் மக்களின் பிரச்சனைகளை நல்ல முறையில் கையாளக்கூடியவர்களை ம்ககள் தெரிவு செய்யவேண்டும். சத்தம் போடுவதால் மட்டும் அல்ல புத்திஜீவிகளை மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும். என்ற கோரிக்கையையும் நான் முன்வைக்கின்றேன்.
திருகோணமலை மாவட்டம் எமது தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக அந்த மாவட்ட தமிழ் மக்களுக்கான வேண்டுகோளை விடுகின்றேன அங்குள் மக்கள் மாற்றுக் கட்சிகளுக்கு சிங்கள தேசியக் கட்சிகளுக்கோ, அல்லது சிங்கள தேசிய கட்சிகளோடு ஒட்டி உறவாடிய தமிழ் தேசியம் என்று கூறிக் கொள்ளுகின்ற கட்சிகளையோ ஆதரிப்பதை தவிர்த்து, எமது தேசியத்தின்பால் நிற்கின்ற ஒட்டுமொத்த கட்சிகளிலும் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். அந்த மாவட்டத்திலேயே நீங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை இந்த தேர்தலில் விடவேண்டாம் என்ற அடிப்படையில் மாற்றுக் கட்சிகளுக்கும், பணம் காட்டுகின்றவர்களுக்கும், பேச்சுக்கள் மூலம் மக்களை திசை திருப்புன்றவர்களுக்கும், உங்கள் வாக்குரிமையை அளிப்பதனால் எமது தமிழினத்தின் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு எந்த வழியில் நீங்கள் துணைபோகக் கூடாது.
அதபோல் அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையில் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதேசசபைத் தவிசாளர் உள்ளிட்ட துடிப்புள்ள வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றாள். அம்பாறை மாவட்டம் தமிழ் மக்கள் எமது கட்சியிலே போட்டியிடுகின்ற ஒரு துடிப்புமிக்க சமூக செயற்பாட்டாளர்களை, சேவை செய்யக்கூடியவர்களை நீங்கள் தெரிவு செய்யவேண்டும்.
அம்பாறை மாவட்டத்தின் இருப்பை குறைப்பதற்காக எமது தமிழ் தேசியத்தினால் கிழக்கு மீட்க வந்த என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு சதி செய்து மக்களை இன்னும் இன்னும் பிரித்தாழும் தந்திரத்தை கொண்டு செயற்படுகின்றார்கள்.
அவர்கள் மட்டக்களப்பில் மாத்திரம் கடந்தமுறை போட்டியிட்டனர் தன்போது அம்;பாறை மற்றும் திருவோணமலை மாவட்டங்களிலும், போட்டியிட்டு எமது தமிழ் மக்களை அகற்றுவதற்காக தமிழர் பிரதிநிதித்துவத்தை அகற்றுவதற்கான சதி முயற்சியில் இறங்கி இந்த முறை தேர்தலிலும் போட்டியிடுகின்றார்கள்.
மக்கள் இனம் கண்டு அவர்களை ஒதுக்கவேண்டும். ஏனெனில் எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான சூழ்ச்சியில் சிங்கள தேசியத்தோடு சேர்ந்து செயற்பட்டு எமது மக்களுக்கு அபிவிருத்தி என்றெல்லாம் சொல்லி எமது மக்களை திசை திருப்பின்ற செயற்பாட்டை செயற்படுகின்ற அவ்வாறான காட்சிகளை மக்கள் அகற்ற வேண்டும். அம்பாறை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், தமிழினத்தின் பரம்பல் மிக குறைவாக சென்று கொண்டிருக்கின்றது. அந்த மாவட்டங்களிலுள்ள தமிழ் உணர்வுகள் அத்தனை பேரும் ஒருமித்து மாற்றுக் கட்சிகளை ஒதுக்கிவிட்டு எமது தமிழ் தேசியத்தின் பால் இருக்கின்ற கட்சிகளை ஒழுங்கமைத்து அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டுமே நாங்கள் இந்த பிரதிநிதித்துவத்தை பெற முடியும்.
கல்முனை பிரதேச செயலக விடயமாக கடந்த காலங்களில்
எவ்வாறு இவ்வாறு செயற்பட்டும், எவ்வாறு போராட்டங்கள் நடத்தியும், இற்றவரை ஒரு தீர்வு
கிடைக்கப் பெறவில்லை. ஆகவே இம்முறை முறை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியை
அம்பாறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் அனுப்புவதன் ஊடாக எமது உரிமையை வென்றெடுக்க
முடியும்.
நாங்கள் ஊழலற்ற நேர்மையான திறமையான ஒரு
நிருவாகத்தை கொண்டு நடத்துவோம் என ஜனாதிபதி கூறுகின்றார். ஊழல் செய்தவர்களை அகற்றுவோம்
ஊழல் செய்தவனுக்கு தண்டனை வழங்குவோம் என்ற அடிப்படையில் பேச்சுக்கள் மூலமும் இந்த தேர்தல்
பிரச்சாரத்தை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment