மட்டக்களப்பில் பலத்த வெள்ளம் பெரியகல்லாறு முகத்துவாரம் (ஆற்றவாய்) வெட்டப்பட்டுள்ளது.
தற்போது பெய்துவரும் வடகீழ் பருவப் பெயற்சி மழை காரணமாக மட்டக்ளப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்களில் பலத்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகளில் சற்று தளம்பல் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனால் பல கிராமங்களின் உள் வீதிகளும் வெள்ள நீராமல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரியகல்லாறு ஆற்றுவாய் வெட்டப்பட்டு வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என அப்பபுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளிற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் உரிய அரச அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதற்கிணங்க இன்று செவ்வாய்கிழமை(26.11.2024) பெரியகல்லாறு முகத்துவாரம் (ஆற்றுவாய்) வெட்டப்பட்டு வெள்ளநீர் கடலை நோக்கி வழிந்தோடுவதற்கு வழிவமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினர், பொறியியலாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு உரிய செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு நல்கியிருந்தனர்.
0 Comments:
Post a Comment