நான் பாராளுமன்ற உறுப்பினரானால் ஐந்து வருட வேதனத்தையும் வறிய மக்களின் மேம்பாட்டிற்காக வழங்குவேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை போட்டியிடும் வேட்பாளருமாகிய சண்முகலிங்கம் சுரேஸ்குமார் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
என்னுடைய மக்கள் பணி ஓயாது இன்றும் கூட நான் கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் அரச காணியை பிடித்த ஒருவரை தடுத்ததற்காக வழக்கிற்காக மட்டக்களப்பு நீதி மன்றத்திற்கு சென்று வந்துள்ளேன்.
நான் ஒரு வறியக் கேட்டிற்கு கீழ் இருந்து வந்தவன் என்ற அடிப்படையில் நான் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்ற சிறார்களுக்காக இலவச கல்வி மையம் மற்றும் இலவச சட்ட மையத்தையும் உருவாக்கி அதன் ஊடாக வறுமை கோட்டின் கீழ் கஸ்டப்படுபவர்களுக்காக இலவசமாக சட்ட சேவையினை வழங்க திட்டமிட்டுள்ளேன்.
அத்தோடு நான் வியாபார ரீதியாக பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன் அந்த வகையில் வெளிநாட்டு நிதி பங்களிப்புக்களை கொண்டு வருவதன் ஊடாக வறிய கிராமங்களை கல்வி, பொருளாதார ரீதியாக இளைஞர் யுவதிகளை வளப்படுத்த திட்டமிட்டுள்ளேன் நிச்சமயாக அவற்றை என்னால் செய்ய முடியும்.
மட்டக்களப்பு மண்னை விட்டுக் கொடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நான் முன்னின்று செயற்படுவேன் என்றும். இளைஞர்களை நல்ல முறையில் வளப்படுத்த நான் என்னால் ஆன சேவையை ஆற்றுவேன் என்றும் நான் பாராளுமன்ற உறுப்பினரானால் ஐந்து வருட வேதனத்தையும் வறிய மக்களின் மேம்பாட்டிற்காகவும் அதில் 6 மாத சம்பளத்தினை விவசாய அமைப்புகளிற்கும் வழங்குவேன் என்றும் இந்நேரத்தில் நான் உறுதியாக கூறிக்கொள்வதுடன், நான் போட்டியிடும் படகு சின்னத்திற்கும் 7 ஆம் இலக்கத்திற்கும் வாக்களிப்பதன் ஊடாக என்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
0 Comments:
Post a Comment