மட்டக்களப்பில் புதன்கிழமை மழை ஓய்ந்துள்ள போதிலும் படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்குமான போக்குவரத்து மார்க்கங்கள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன.
தற்போது பெய்துவரும் வடகீழ் பருவப் பெயற்சி மழை புதன்கிழமை(27.11.2024) மட்டக்களப்பு மாவட்டத்தில் சற்று ஓய்ந்துள்ளது. எனினும் வெள்ள அனர்த்தம் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.,து ,வ்வாறு ,ருக்க மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிற்கும், எழுவாங்கரைப் பகுதிக்குமான தரைவழிப்போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளன. மண்டூர் குருமண்வெளி படகுப்பாதை, குருக்கள்மடம் அப்பிளாந்துறை படகுப்பாதை, போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பட்டிருப்பு, வெல்லாவெளி பிரதான வீதி, மண்முனை கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, செங்கலடி பதுளை வீதி, மங்கும் கிரன் பிராதான வீதி என்பன முற்றாக வெள்ளநீரினால் மூழ்கியுள்ளதகால் போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளன. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் உழவு ,யந்திரங்களில் ஒருசிலர் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
,வற்றினைவிட வெல்லாவெளி மண்டூர், வெல்லாவெளி திவுலானை, பெரிபோரதீவு பழுகாமம், உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் மக்களின் உள்ளுர் போக்குவரத்துக்கும் தடைப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment