றொட்டரிக் கழகத்தினால் வெள்ளத்தினால் பாதிப்புற்றுள்ள வேத்துச்சேனைக் கிராமமக்களுக்கு சமைத்து உணவு வழங்கி வைப்பு.
தற்போது பெய்துவரும் பலத்த அடைமழையால் பாதிப்புற்ற மக்களுக்கு றொட்டறிக் கழகத்தினால் இன்றயதினம் செவ்வாய்கிழமை(24.11.2024) சமைத்த உணவுகள் வெல்லாவெளிப் பிரதேசத்தில் வழங்கி வைக்கப்பட்டடுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் வெல்லாவெளிப் பிரதேசத்தின் வேத்துச்சேனைக் கிராம மக்களுக்கே போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த சமைத்து உணவுகள் வழங்கி வைக்கப்பட்டடுள்ளன.
றொட்டரிக் கழகத்தின் ஆளுநரின் ஆலோசனையின் பெயரில் றொட்டரிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையின் தலைவர் றெட்டரியன் எம்.ஜெகன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த மனிதாபிமான பணியில் றெட்டரிக் கழகத்தின் செயலாளர் றெட்டரியன் கருணாகரன், றெட்டரியன் முத்துலிங்கம், றெட்டரி திவ்யா உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
மாவட்டத்தில் மக்களுக்கு எங்கு இடர்கள் வந்திடினும் தமது கழகம் முன்னின்று மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதுபோல் தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள வெள்ள அனர்த்திற்கு தம்மதால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருவதோடு, மேலும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வேத்துச்சேனைக் கிராம மக்களுக்கு சமைத்த உணவு வழங்கவுள்ளதாக றொட்டரிக் கழகத்தின் மட்டக்களப்பு நகர் கிளையின் தலைவர் றெட்டரியன் எம்.ஜெகன் தெரிவித்துள்ளார்.
Jegan M
President
Rotary Club of
Batticaloa City
0 Comments:
Post a Comment