30 Nov 2024

முக்கிய அறிவிப்பு சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

SHARE

மட்டக்களப்பில் இரவு வேளையில் வீதிக்கு வந்துள்ள மக்கள் சுனாமி வரப்போவதாக வதந்தி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை(30.11.2024) இரவு பெரும்பாலான கிராம மக்கள் கடல் வற்றியுள்ளதாகவும், சுனாமி தாக்கம் ஏற்படப்போவதாகவும் தெரிவித்து பெரும் பீதி ஏற்பட்டு வீதிக்கு வந்துள்ளனர். கடற்கரையை அண்டியுள்ள மக்களில் சிலர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

இவ்விடையம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்ட கேட்டபோது,

சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் சுனாமி அனர்த்தம் ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருகின்றோம். என தெரிவித்தார்.


 



SHARE

Author: verified_user

0 Comments: