தமிழ் தேசத்திலுள்ள எந்தவொரு பிரச்சினைகளும் இதுவரையில் முற்றாக தீர்க்கப்படவில்லை – வேட்பாளர் வசந்தராஜா
.எமது நாட்டைப் பொறுத்தவரையிலே தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு விதமான பிரச்சனைகள் நிலவுவதை நாம் எல்லோரும் அறிவோம். தமிழ் தேசத்திலுள்ள எந்தவொரு பிரச்சினைகளும் இதுவரையில் முற்றாக தீர்க்கப்படவில்லை. 70 வருடங்களாக இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் கட்சிகள், தமிழ் தலைவர்கள், தமிழ் மக்கள் போராடி வந்த போதிலும் இன்னும் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.என பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் பிரபல சமூக சேவையாளருமான தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் சனிக்கிழமை(02.11.2024) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவத் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
காணாமலாக்கப்பட்டவர்களுக்குரிய பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. பொதுமக்களுக்கான காணி பிரச்சினை தீர்க்கப்பவில்லை, தொல்லியல் பிரச்சனை என்று புதிய பிரச்சினை ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது, வனவிலங்கு திணைக்களத்தினால் ஏற்படும் பிரச்சனை, மேய்ச்சல் தரைப் பிரச்சனை, பௌத்த மாயமாக்கல் பிரச்சினை, என பல்வேறு விதமான பிரச்சினைகள் இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்காக இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது புதிய அரசு வந்திருக்கிறது. அந்த புதிய அரசுகூட எமது பிரச்சினைகளை தீர்ப்பார்களா? என்ற ஒரு கேள்விக்குறியோடு தான் தமிழ் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே இந்த புதிய அரசு எமது மக்களின் பிரச்சினைகளை நிச்சயமாக தீர்க்க வேண்டும். எனது பிரச்சனைகளை இந்த புதிய அரசை தீர்ப்போம் என்று சொன்னாலும் கூட அதனை நடைமுறைப்படுத்துவார்களா? என்பதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த புதிய அரசிடம் நாங்கள் முன்வைக்கின்ற கோரிக்கை இந்த நாட்டிலே இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கப்பட வேண்டும். பௌத்த மயமாக்கல் போன்ற பல்வேறான பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். எங்களுடைய தமிழ் மக்கள் சமஸ்டி அரசியல் தீர்வு எனக்கு உடனடியாக தரப்பட வேண்டும். சமஸ்ட்டியையே எமது மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அதனையே எமது மக்கள் விரும்புகிறார்கள். உடனடியாக இந்த அரசு நமது மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்திலே மக்கள் எனக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன் வந்திருக்கின்றார்கள். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலே நாங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலே சங்கு சின்னத்திலேயே எட்டு பேர் போட்டிடுகின்றோம் அதிலே எனது இலக்கம் இரண்டிற்கு மக்கள் வாக்களிப்பார்கள் விரும்பினால் இன்னும் இரு வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்கலாம். எனவே எம்மை போன்றவர்களுக்கு மக்கள் வாக்களியுங்கள் நாங்கள் எனது மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவும் இலங்கை பாராளுமன்றத்திலும், சர்வதேசத்திலும், அதைவிட எங்கெங்கெல்லாம் நமது மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை நாட வேண்டுமோ அந்த இடங்களுக்கெல்லாம் சென்று பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுவதற்கும், எங்கே சாதகமான நிலை இருக்கிறதோ அங்கே சென்று நாங்க எமது அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ள விரும்புகின்றோம்.
இந்தத் தருணத்திலே பொதுமக்கள் அனைவரும் எமது பிரதிநிதித்துவத்தை காப்பாற்றக் கூடிய வகையிலே பாராளுமன்றத்திலே குரல் கொடுக்கக் கூடியவர்களுக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் 30 வருடங்களாக பொதுமக்களுக்காக சமூக சேவையை சில அமைப்புகள் ஊடாக இணைந்து மேற்கொண்டு வந்திருக்கின்றேன். இந்நிலை தமிழ் தேசியப் பரப்பிலே மேற்கொள்ள வேண்டிய பல வேலைகளை நாங்கள் இணைந்து செய்திருக்கிறோம். எதிர்காலத்திலே எமது தமிழ் பிரதிநிதிகள் தமிழ் தேசிய பரப்பிலேயே பணிபுரிகின்ற அல்லது பணிபுரிக்கையாக இருக்கின்ற பிரதிநிதிகள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகின்றேன். இதுவரை காலமும் பிரதான கட்சியாக இருந்து வந்தது இலங்கை தமிழரசு கட்சி அதோடு இணைந்து எமது பல கட்சிகளும் செயற்பட்டு வந்தன. அதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பாகும். அப்போது தமிழ் மக்களும் பிரச்சினைகளை வெளியுலகிற்கு கொண்டு வருவதற்குரிய பலம் இருந்தது ஆனால் இப்போது தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதனால் எங்களுடைய தேசிய பிரச்சனையை தீர்ப்பதற்குரிய பலம் குறைந்து இருக்கின்றது என்பதை வலியுறுத்திச் சொல்கின்றேன்.
எதிர்காலத்திலே தேர்ந்தெடுக்கப்படுகின்ற பிரதிநிதிகள் அத்தனை பேரும் ஒரே நோக்கத்திற்காக சமஸ்டி தீர்வை கொண்டு வருவதற்காக தமிழ் மக்களுக்கான அதிகாரத்தை பகிர்ந்து தரக்கூடிய வகையிலே நாங்கள் அத்தனை பேரும் இணைந்து நாங்கள் செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். அரசிடம் மட்டும் நாங்கள் கேட்டு பயனில்லை ஏனெனில் 70 வருட கால அனுபவம் எம்மிடம் இருக்கிறது ஆகவே சர்வதேசத்திடம் எமது பிரச்சினைகளை கதைக்க வேண்டிய நிலைமை இருக்கின்றது. அதேபோன்று புலம் பெயர்ந்த அமைப்புக்களில் இருந்து அந்த மக்கள் எனக்கு போதிய அளவு உதவி கொண்டிருந்தாலும்கூட அதனை நெறிப்படுத்தி செய்ய வேண்டிய நல்ல தலைமைத்துவம் தமிழ் மக்களுக்கு தேவையாக இருக்கின்றது. அந்த தலைமைத்துவத்தை நான் சார்ந்திருக்கின்ற கட்சி நிச்சயமாக ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆகவே எமது கட்சியை பலப்படுத்தி தமிழர் பிரதிநிதிகள் ஒன்றாக இணைத்து எதிர்காலத்திலே எமது தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்காகவும் அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரம் கல்வி முதலான பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும் நாங்கள் அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டியயுள்ளது.
0 Comments:
Post a Comment