1 Nov 2024

மட்டக்களப்பு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் - அருண்மொழிவர்மன்.

SHARE

மட்டக்களப்பு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் - அருண்மொழிவர்மன்.

மட்டக்களப்பு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஒரு தொடர்ச்சியாக ஒரு கட்சியில் இருந்து கொண்டு இன்னொரு கட்சியில் சென்று விட்டு சொல்வதல்ல மாற்றம். மட்டக்களப்பு மக்கள் எதிர்பார்ப்பது புதியவர்கள் மட்டுமல்ல தகுதியானவர்கள் வரவேண்டும் என்பதுதான். தகுதியானவர்கள் என்றால் அவர்கள் இந்த மண்ணுக்கு ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 

என பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் போட்டியிடும் போட்டியிடும் வேட்பாளரும், அக்கட்சியின் தலைவருமான அருண்மொழிவர்மன் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை(27.10.2024) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகரில் தமது தேர்தல் பிரசார நடவடிக்;கைகைகளை முன்நெடுத்த போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில். 

இந்த சூழ்நிலையில் அரசு மாறினாலும் தமிழ் மக்களின் தேவைகள் இன்னும் இருக்கின்றன. அதேவேளை எமது மக்களின் உரிமை பிரச்சினைகளும் இருக்கின்றன. எமது உரிமைகளை நாங்கள் வென்றெடுக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கின்றது. அதேபோல் இன்று தமிழ் மக்களுiயே எதிர்பார்ப்பு அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. நாங்கள் எந்த கிராமத்துக்கு சென்றாலும் ஒற்றுமை இல்லை என்பதை கூறுகிறார்கள். 

தமிழர்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக பல வழிகள் இருக்கின்றன. கீரை கடைக்கும் எதிர் கடை வேண்டும் என்பதை மக்கள் உணர்கிறார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியை பொறுத்தவரையில் நாங்கள் பாரம்பரிய தமிழ் கட்சி மாத்திரமன்றி தமிழ் தேசிய இனத்திற்கு ஒரு அடையாளத்தை கொண்டு வர வேண்டும் என்று ஒரு எண்ணத்திலே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஈழத் தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வு வரவேண்டும் என்பதில் நாங்கள் தொடர்ச்சியாக அந்த விடயத்தில் தெளிவாக இருக்கின்றோம். இன்று மட்டக்களப்பு மாவட்ட மக்களை பொறுத்தவரையில் அரசியல் மாற்றம் என்பது நிச்சயமாக வரவேண்டும் என்பது விடயமாகும். அதற்கான வழிகளை மக்கள் தேடுவார்கள் என நம்புகின்றோம். அந்த அடிப்படையில்தான் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய காட்சிகளும் வாக்கு பெறுவதில் ஈடுபடுகின்றார்கள் என்பது தெரிந்த விடயம். ஆனால் ஜதார்த்தம் என்ன? தமிழர்கள் உணர்ந்தது என்ன?  நாங்கள் வெறுமனே அரச கட்சிகளுக்கு வாக்களித்து அதன் மூலமாக எமது பிரச்சினைகளைத் தீர்க்கும் நிலை இங்கு ஏற்படவில்லை. இனி தேர்தலில் போட்டியிடுபவர்கள் எல்லாம் நாங்கள் அதை செய்திருக்கின்றோம், என தெரிவிக்கின்றார்கள். கடந்த காலங்களை பற்றி பேசி அர்த்தமில்லை மக்களின் இன்றைய தேவைகளை நாங்கள் உணர வேண்டும். 

மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் இருக்கின்றன, வாழ்வாதார பிரச்சனைகள் இருக்கின்றன, அதற்கு அரசோடு இணைந்துதான் செயல்படலாம் என சில நினைக்கின்றார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணியும் என்னைப் பொருத்தவரையில் மக்கள் தேவை ஒருபுறம் எமது உரிபுறமும் இரண்டையும், நாங்கள் கண்ணியமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் அதற்கான வழிமுறைகளை நாங்கள் தேடுவோம். 

முக்கியமாக புவிசார் அரசியல் இருக்கின்றன பூகோள அரசியல் மாற்றங்களை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன இராஜதந்திர வட்டாரங்களுடன் நாங்கள் எவ்வாறு செயற்படப் போகின்றோம் என்ற கேள்விகள் இருக்கின்றன. எனது தலைமையின் கீழ் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் மட்டக்களப்பை மையமாக வைத்து தான் ஆரம்பிக்கப்படுகிறது. 

முக்கியமாக தொடர்ச்சியாக பேசப்படும் விடயம் யாதெனில் மட்டக்களப்பிலே பிரதேச வாதத்தை வைத்துக்கொண்டு பலர் அரசியலை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள். அதற்கெல்லாம் இங்க கேள்வி இல்லை முக்கியமாக தமிழ் தேசிய இனம் 75 வருடங்களாக ஒரு இனமாக ஒரு மக்களாக பல அர்ப்பணிப்புகளை செய்து இருக்கின்றது. இன்று 40 ஆண்டுகளுக்குப்பின் மட்டக்களப்பிலே ஒரு பாரம்பரிய தமிழ் தேசிய அரசியல் கட்சியின் தலைமைத்துவம் மட்டக்களப்புக்கு வந்திருக்கின்றது. மட்டக்களப்பு மக்களின் அடிப்படைத் தேவைகளையும், தமிழ் தேசிய இனத்தின் உரிமையை ஒன்றாக கையாள வேண்டிய தருணம் இது அதனை என்னால் செய்ய முடியும் என்ற முழு நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே எனது அரசியலை நான் முன்னெடுத்துச் செல்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: