கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகவும் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிவந்த திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் கல்வியமைச்சின் வெளியீடுகள் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகமாக கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் உள்நுழைந்த இவர், 2017 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர உத்தியோகத்தராக பதவி உயர்த்தப்பட்டார். இள வயதில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபராக நான்கு வருடங்களும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராகவும் அதன் பின்னர் மாகாண கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி தொடர்ச்சியாக மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கு தேசிய ரீதியில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்ட முன்னின்று செயற்பட்டு வந்த நிலையில் இவருக்கு குறித்த பதவியுயர்வு கல்வியமைச்சினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment