13 Nov 2024

பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் மட்டக்களப்பில் பூர்த்தி பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

SHARE

பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் மட்டக்களப்பில் பூர்த்தி பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்கள் எதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதியப்படவில்லை, பாதுகாப்பு பணிகளில் முப்படையினரும்  ஈடுபட்டுள்ளனர். என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே முரளிதரன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மட்டக்களப்பில் வாக்கெண்ணும் நிலையமாக விளங்கும் இந்துக்கல்லூரியிலிருந்து புதன்கிழமை(13.11.2024) காலை பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இடம்பெற உள்ள பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதற்காக மாவட்டத்தில் 6750 அரச அதிகாரிகள் கடமையில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  வாக்கு எண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 46  வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 218 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பாரிய வன்முறை சம்பவங்கள் இதுவும் மாவட்டத்தில் பதியப்படவில்லை. முப்படையினரும் மாவட்டத்தின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

மாவட்டத்தில் தேர்தல் காலத்தில் அனர்த்த நிலைகள் ஏற்பட்டால் அவற்றிற்கான முன்னாயத்த நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவும் பொதுமக்கள் நேர காலத்துடன் சென்று வாக்களிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார். 

இம்முறை தேர்தல் பணிகளில் 1900 பொலிசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதுடன், 87 விசேட கண்காணிப்பு பொலிஸ் பிரிவினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் கண்காணிப்பு பணிகளில் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இடம்பெற உள்ள தேர்தலை எவ்வித வன்முறைகளும் இன்றி அமைதியாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தேவை. என மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சி.பி.எம் சுபியான் தெரிவித்தார்.













 

SHARE

Author: verified_user

0 Comments: