மண்முனை தென் எருவில்பற்று செயலகத்தின் இரத்ததான நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின், ஏற்பாட்டில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் இரத்ததான நிகழ்வு 7வது தடவையாக பிரதேச செலயக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளின் இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வானது திங்கட்கிழமை (11.11.2024) காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணி வரை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், என இருநூறுக்கும் அதிகமானோர் இவ் உன்னதமான நிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர்.
இந்த இரத்ததான நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் தொடர்ச்சியாக 7வது தடவையாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment