சிறுபான்மை இன மக்கள் தற்போது எதிர்கொண்டு வரும் சவால்கள் தொடபான கருத்தாய்வு.
சிறுபான்மை இன மக்கள் தற்போது எதிர்கொண்டு வரும் சவால்கள் என்ன என்பது தொடபான கருத்தாய்வுக் கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பில் தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (10.11.2024) நடைபெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,
ஊடகவியலாளர்கள், இளைஞர், யுவதிகள், தன்னார்வ தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,
என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சுகாதாரம், கல்வி மற்றும் விளையட்டு, அரசியல், ஊடகம் மற்றும் சுதந்திரம், காணி, சுற்றாடல், மொழி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம், பொதுச் சேவைகள் மற்றும் நிருவாகம், வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சமயம் மற்றும் கலாசாரம், மற்றும் வரலாறு, உள்ளிட்ட பல துறைகளில் தற்காலத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொண்டு வருகின்ற சவால்கள் என்ன என்பது தொடர்பில் கலந்து கொண்டோரிடமிருந்து கலந்துரையாடல் மூலம் கருத்துக்கள் பெறப்பட்டன.
இவ்வாறான கலந்துரையாடல் வடக்கு கிழக்கு
முழுவதும் தாம் மேற்கொண்டு, மக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு
பெறப்பட்ட தகவல்கள் ஒரு ஆவணமாகத் தயாரிக்கப்படவுள்ளதாகவும் கிழக்கு சமூக அபிவிருத்தி
மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முகமட் புகாரி இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment