1 Nov 2024

என் மீது யாரும் ஊழல் குற்றச்சாட்டை செலுத்த முடியாது – கருணா அம்மான்.

SHARE

என் மீது யாரும் ஊழல் குற்றச்சாட்டை செலுத்த முடியாது – கருணா அம்மான்.

ஒருவர்கூட என் மீது ஊழல் குற்றச்சாட்டை செலுத்த முடியாது. நானும் பொதுமக்களைப் போல் ஒரு சாதாரணமாக வாழ்பவன் தான் எவரும் என் மீது ஊழல் கூட்டுச்சாட்டை செலுத்த முடியாது. ஊழல் என்பது எனக்கு பிடிக்காது எந்தவித மதுபான சாலைகளுக்கான அனுமதி பத்திரம் என்னிடம் இல்லை. என முன்னாள் பிரதியமைச்சரும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்யிடும் வேட்பாளருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் ஞாயிற்றுக்கிழமை(27.10.2024) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் கடந்த காலத்தில் இருந்தார்கள் அவர்கள் அவர்கள் வெளிநாட்டில் சொத்து சேர்த்திருக்கின்றார்கள். முதலாவதாக நாங்கள் இந்த நாட்டிலே ஊழலை இல்லாத ஒழிக்க வேண்டும். நான் இரண்டு தடவை பாராளுமன்ற இணைந்து இருக்கின்றேன் மில்லியன் கணக்கில் நிதியைச் செலவிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை செய்துள்ளேன். இன்னும் தமிழ் மக்கள் மத்தியில் பல வேலை திட்டங்கள் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளன. தமிழ் மக்கள் 50 வருட பின்னடைவில் யுத்தத்தினால் எது வித அபிவிருத்திகளுமின்றி  இருந்தவர்கள் அதனை வளத்தெடுப்பதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும். 

ஒருவர் கூட என்மீது ஊழல் குற்றச்சாட்டை செலுத்த முடியாது. நானும் பொதுமக்களைப் போல் ஒரு சாதாரணமாக வாழ்பவன்தான். எவரும் என்மீது ஊழல் கூட்டுச்சாட்டை செலுத்த முடியாது. ஊழல் என்பது எனக்கு பிடிக்காது எந்தவித மதுபான சாலைகளுக்கான அனுமதி பத்திரமும் என்னிடம் இல்லை. மண் ஏற்றி விற்பனை செய்யும் அனுமதி பத்திரங்கள் என்னிடம் இல்லை. கடந்த காலத்தில் இரண்டு அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தார்கள். செங்லடி பிரதேச செயலகத்தில் சென்று பார்த்தால் ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட மண் ஏற்றும் அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில்கூட இலஞ்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

கொள்ளையடித்தவர்கள் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் அவர்களுக்கு விசாரணை வரும். அனுரகுமார திசாநாயக்க என்னுடைய நண்பர் அவருக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்குமாறு நான் தெரிவித்து இருந்தேன். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அவர் நாட்டில் ஜனாதிபதியாக வர வேண்டும் என நான் எதிர்பார்த்தேன். அவர் தற்போது ஜனாதிபதி வந்திருக்கின்றார். ஆனாலும் அவர் ஊழலை ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். அதற்காக ஜனாதியிடத்தில் நான் அன்பாக வேண்டு கொள்கின்றேன். ஈஸ்டர் குண்டு தாக்குதல் கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டும். பச்சிழம் குழந்தைகள் உட்பட பலர் சிதறி நமது உயிரிழந்துள்ளார்கள். 

ஈஸ்ட் குண்டு தாக்கல் தொடர்பான சூத்திரதாரிகள் நமக்குள்ளே பலர் இருக்கின்றார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனாலும் தலைவர் தொடக்கம் சிஷியன் வரைக்கும் கொள்ளையடித்தால் எவ்வாறு நாடு உடுப்படும். வீடு கட்டுவதற்காக ஓர் விண்ணப்பம் பெறுவதற்காக பத்தாயிரம் ரூபாய் இலஞ்சமாக வழங்க வேண்டும். அவ்வாறு தான் நிலைமை நான் அமைச்சராக இருக்கும் போது அவ்வாறு நிலைமையில் இருந்தது இல்லை. எனவே ஊழலற்ற சமூகத்தை உருவாக்கி நமது தேசிய இனத்திற்காக அபிவிருத்திப் பாதையில் மக்களை நாம் கொண்டு செல்ல வேண்டும். அதுதான் எனது நோக்கமும். இதை இங்கு மாத்திரம் இன்றி வடகிழக்கிலே வாழ்கின்ற தமிழர்களுக்கு ஒரு ஆளுமையான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். என்பதற்காக வேண்டி தான் நான் வந்துள்ளேன். 

போராட்டம் நிறைவேற்ற பின்னர் பலர் தலைமைத்துவத்தை வழங்குவார்கள் என வழங்கிப் பார்த்தோம். ஆனாலும் அவர்கள் தங்களை தாங்களே வளர்த்துக் கொள்கின்றார்களே தவிர மக்களுக்கு சேவை செய்யும் நோக்கம் அல்ல. வருடாந்தம் வரும் வரவு செலவுத் திட்டத்திற்காக ஆதரவு தெரிவித்து விட்டு கோடிக்கணக்கில் இலஞ்சம் பெறுகின்றார்கள். இலஞ்சம் பெறாதவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு சென்றால் நமது சமூக எவ்வாறு உருப்படுவது. தேசியம் தேசியம் என்று வருபவர்கள் இடத்தில் ஒன்றுமே இல்லை அவர்களால் எதுவித பிரயோசனமில்லை. 

பண்ணையாளர்களுக்கு தமது கால்நடைகள் வளர்ப்பதற்கு இடமில்லை அதனை ஓரினம் பிடித்து வைத்து கொண்டு மாடுகளை சுடுகின்றார்கள். மட்டக்களப்பு கொழும்பு வீதியில் இன்னும் சிலர் கணிணை சூறையாடுகின்றார்கள். புணாணையிலே ஒரு பல்கலைக்கழகம் கிஸ்புல்லாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அது அரபுக் கேல்லூரி போன்று தான் அமைந்துள்ளது. அதற்கு காணியை வழங்கியவர்களும் நமது  முன்பிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். அதனை நான் தடுத்து வைத்திருந்தேன். இவற்றையெல்லாம் எதிர்த்து நின்று செயல்படக்கூடிய தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். 

உலகம் முழுவதும் சென்று நமது மக்களுக்காக பேச்சுவார்த்தை நடத்திய தலைவர் நான் மாத்திரமே இருக்கின்றேன். வேறு யாருமில்லை நானும் அன்றன் பாலசிங்கம் அவர்களும் தான் 20, 30 நாடுகளுக்குச் சென்றுள்ளோம் மக்களுக்காக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அந்தத் தொடர்பாளர்கள் அனைத்தும் தற்போதும் நம்மிடம் இருக்கின்றார்கள். இவைகளை முன்னெடுப்பதற்கு மக்களின் ஆணை தேவை. நான் போராட்டத்தில் எவ்வாறு இருந்தேனோ அவ்வாறுதான் தற்போதும் இருக்கின்றேன். என் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கப்படும் பட்சத்தில் நான் அனைத்தையும் விட்டு விட்டு சென்று விடுவேன். 

உலகத்திலேயே அதிக படிப்பு படித்தவர்தான் யாழ்ப்பாணத்திலே மதுசார அனுமதி பத்திரம் வழங்கயுள்ளார். தற்போது ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததும் அனைத்து மதுபான அனுமதிப்பத்திரங்களையும் மீழப்பெறப்படும் எக கூறியிருந்தார். ஆனால் ஒரு அனுமதி பத்திரத்தை கூட அவர் மீளப் பெறவில்லை அனைவரும் சொல்வது ஒன்று செய்வது வேறாக இருக்கின்றது. 

அனுரகுமாரன் திசாநாயக்கா அவர்கள் நினைத்தாந் போல் நாட்டை வழி நடத்த முடியாது எங்களோடு எல்லாம் ஒத்துழைத்துதான் நாட்டை வழி நடத்த வேண்டியுள்ளது. அவர்களோடு நாமும் முன்னின்று  கதைக்க வேண்டும் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் ஏவிபி கட்சிக்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டாம். அவர்களைப் போல் இனத் துவேஷம் உள்ள கட்சி வேறு எங்கும் இல்லை. வடக்கு கிழக்கை இரண்டாக பிரித்து நமது இனத்தையே பிரித்துள்ளார்கள் அவர்கள். 

அபிவிருத்தியையும், நமது தனித்துவத்தையும் காப்பாற்றிக் கொண்டு நாம் முன் கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் தான் நாங்கள். பல போராளிகள் எமது கண்முன்னே மடிந்தார்கள். எனது சொந்த அண்ணனைகூட யுத்தத்தில் இழந்திருக்கின்றேன் 

தேசிய கதைப்பவர்கள் எவரும் ஒழுங்கானவர்கள் அல்ல அனைவரும் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள்தான் நாம் வீட்டுக்கு வாக்களிப்பது, நமது வீடுகளுக்கு கூரையும், இல்லை கதவுமில்லை, ஆனால் அவர்கள் வெளிநாடுகளிலும், கொழும்பிலும், வீடுகள் வாங்கி உள்ளார்கள். 20 வீதம் கமிஷனுக்கு கம்பி இல்லாமல் கொங்கிரிட் வீதிகள் போடப்பட்டுள்ளன. 

கருணா அம்மான் எனும் நபருக்கு இலங்கைச் சட்டத்தில் இடம் இருக்கின்றது அவர் மரணிக்கும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று. எனது பாதுகாப்பை மாத்திரம் அவர்கள் மீள பெற முடியாது. இருந்த போதிலும் மக்களின் அதிகாரத்தை தற்போது வேண்டி நிற்கின்றேன.; அப்போதுதான் அதிக அளவு அபிவிருத்திகளையும் நாம் மேற்கொள்ள முடியும். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் புலம் பெயர் மக்களின் ஒத்துழைப்புடன்தான் சங்கு சின்னத்தில் தமிழர் ஒருவர் போட்டியிட்டார் அதுக்கும் தலைவர் யாருமில்லை. அதுபோன்றுதான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தலைவர் யாருமில்லை. சங்கு சின்னத்தில் போட்டியிடர்களுக்கு தலைவர் யாருமில்லை. கடந்த முறை பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 கோடி ரூபாவுக்கு முந்திரியன் விதையை சாப்பிட்டுள்ளார்கள் பாராளுமன்றத்திலேயே சென்று ஆங்கிலமும் சிங்களமும் கதைத்தால் அவர்கள் பெரியவர்கள் என மக்கள் நினைத்து விடக்கூடாது. நாங்கள் யுத்தத்தில் காட்டில் இருந்தோம். அவர்களைவிட ஆங்கிலமும் சிங்களமும் நாங்கள் அதிக அளவு கதைப்போம். 

மட்டக்களப்பில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஒரு நாள் ஆவது மயிலத்தமடு மாதவனின் பண்ணையாளர்களை ஜனாதிபதியிடம் சந்திப்பை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது.  இவற்றைக் கருத்திக் கொண்டு ஒற்றுமையாக இருந்து மக்கள் நமது பலத்தை காண்பிக்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.




 

SHARE

Author: verified_user

0 Comments: