76 வருடங்களுக்குப் பின்னர் இந்த நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் மக்கள் கருணா பிள்ளையான் இதனை யார் வந்தாலும் தடுக்க முடியாது –சுனில் ஹந்துநெத்தி
76 வருடங்களுக்குப் பின்னர் இந்த நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் மக்கள். கிழக்கு மாகாணமே வரலாற்றில் முக்கியமானதாக மாறும் , கருணா பிள்ளையான் இதனை யார் வந்தாலும் தடுக்க முடியாது.
என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநத்தி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் வெள்ளிக்கிழமை(01.11.2024) மாலை நடைபெற்ற தேர்த்ல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
நாங்கள் புதியதொரு பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
விசேடமாக 66 வருட அரசியலை மாற்றி ஊழலை ஒழிப்பதற்காக மக்களின் உண்மையான பிரச்சனையை தேர்ந்தெடுத்து,
தேசிய ஒற்றுமைக்காக நமது நாடு வலுவான நாடாக மாற்றி அமைப்பதற்காக தலைவராக தோழர் அனுரகுமார
திசநாயக்கா அவர்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
38 நாட்களுக்கு முன்பு மக்கள் எடுத்த தீர்மானம் முன்னோக்கி செல்வதற்காகவேதான். உண்மையான பாராளுமன்றத்தை நிர்வகிப்பதற்காக இன்னும் 13 நாட்களில் நமது நாட்டு மக்கள் தேடிக் கொண்டிருக்கின்ற வெற்றிக்காக தோள்கொடுக்க மக்கள் இருக்கின்றார்கள், ஜனாதிபதித் தேர்தலில் தோள் கொடுக்காதவர்களும் இருந்திருக்கலாம் அது ஒரு பிரச்சனையும் இல்லை. நாம் இம்முறை பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்ற பொழுது அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் பொருளாதார மேம்பட்டு, நாட்டின் கடன்சுமை, குறைக்கப்பட்டு மக்களின் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும். எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் புதிய மாற்றம் வேண்டும் என சிந்திக்கிறார்கள்.
எமது தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் வரிப்பணங்கள் குறைக்கப்பட்டு, பொருளாதார சுமை குறைக்கப்பட்டு, மக்களின் சகல பிரச்சனைகளும் தீர்க்கப்படும் இப்போது புதிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை மக்கள் அறிகின்றார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் திசைகாட்டிக்கு வாக்களிக்காமல் போனவர்களாலும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்போம் என்று மக்கள் தீர்மானித்திருக்கின்றார்கள்.
இதற்கு முன்பிருந்த ஜனாதிபதிகள் நமது வாக்குகளை பெற்று எவ்வாறு வெற்றி பெற்றார்கள் தேசிய பாதுகாப்பைக் காட்டி, ஆயுதங்களை காட்டி, இனவாதம், மதவாதத்தை காட்டி, யுத்தங்களை உருவாக்கி, யுத்தங்களுக்கு விலை போகக்கூடிய சூழல்களை உருவாக்கி, நமது நாட்டில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் என்று கூறி பிரச்சனைகளை மக்கள் மத்தியில் வியாபாரம் செய்து அரசியல் செய்தார்கள். இதற்கு கடந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஒரு உதாரணமாகும். கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வரும் போது யுத்தம் இருக்கவில்லை. ஆனால் அவர் யுத்தத்தை உருவாக்கினார.; இனவாதத்தை தோண்டினார். பாம்புகளை காட்டினார். முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இறுதியில் இனவாதத்தைக் காட்டி வாக்குகளை பெற்றார்.
அனுரகுமார திசாநாயக்க மக்களின் விருப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும், இந்த நாட்டின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, இனவாதத்தைக் தோற்கடிப்பதற்காக தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்காகவும் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக இந்த நாட்டின் துஷ்பிரயோகத்துக்கு முடிவெடுப்பதற்காக மக்கள் விருப்பத்துடன் அனுரகுமார திசநாயக்கவுக்கு வாக்களித்தார்கள்.
விடையங்களை தமிழ் மக்களுக்கு தெளிவாக எடுத்துக்காட்ட வில்லை அதற்குரிய சூழல் இருக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் முடிவு இலங்கை வரைபடத்தில் தென்பகுதி எல்லாம் சிவப்பாக இருந்தது. ஏனைய பகுதி பச்சையாக இருந்தது. மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் கடந்த காலங்களைவிட கூடுதலாக மக்கள் எமக்கு வாக்களித்திருக்கின்றார்கள். ஆனால் எமக்குரிய வாக்களிப்பு போதாது அதற்கும் நியாயமான காரணங்கள் உள்ளன. எமக்குரிய மொழி பிரச்சனை இருந்தது. இதற்கு முன்னர் இங்குள்ள மக்களை நாம் சந்திக்க முடியாமல் போயிருந்தது. அதேபோன்று அரசு சலுகைகளை பாவித்து ரணில் விக்கிரமசிங்க பிரச்சாரம் செய்து கொண்டார். அவ்வாறு சஜித் பிரேமதாசா அவர்களும் பிரச்சார செயலை முன்னெடுத்திருந்தார். அவர்கள் ஆட்சி அமைக்க முடியாத காரணத்தால் மக்கள் மத்தியில் எங்களைப் பற்றி ஒரு பயத்தை உருவாக்கியிருந்தனர்.
அனுர தோழர் ஆட்சிக்கு வந்தால் வன்முறைகள் நடைபெறும் மக்களை பழிவாங்குவார்கள் பசியோடு இருக்கக்கூடிய சூழல் ஏற்படும் சுவாமிகளுக்கு தானம் வழங்காத சூழல் ஏற்படும்,என பிரசாரம் மேற்கொண்டு இருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் அனுராத தோழருக்கு வாக்களிக்காமல் இருப்பவர்கள் உள்ளனர் அவர்களுடன் நாங்கள் கோபம் இல்லை. அந்த அரசியல் எனக்கு நன்றாக தெரிகின்றது. ஆனால் இப்போது அந்த சூழல் மாறி இருக்கின்றது அனுரா தோழர் இந்த நாட்டிலே ஜனாதிபதி அவர் ஜனாதிபதி காரியாலயத்தை மாத்திரம்தான் பயன்படுத்துகின்றார்.
மக்களுக்காக வேண்டி ஒரு தலைவர் தற்போது
இருக்கின்றார். வடக்கிலும், கிழக்கிலும், தென்பகுதியிலும், எமது மக்கள் மத்தியிலும்
அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மக்களின் ஆட்சியை உருவாக்குவதற்காக மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர். தற்போது இந்த
பாராளுமன்ற தேர்தலுக்கு உரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இது ஜனாதிபதி தேர்தலின்
பிரதிபலிப்பாக பாராளுமன்றத்தில் இருந்த கள்வர்கள் 60 பேர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட
மாட்டோம் என கூறியிருக்கின்றார்கள்.
பாராளுமன்றத் தேர்தலிலும் மக்களுக்கு அவ்வாறான சூழலை உருவாக்க முடியாமல் இருந்தது. இந்த பிரபுக்களின் அமைச்சுகளை அமைச்சர்களின் பாதுகாப்புகள் இல்லை. இப்போது களவாட முடியாது, பொய் சொல்ல முடியாது, ஒப்பந்தங்கள் மூலமாக களவாட முடியாது, அரசியல் அதிகாரங்களை பாவித்து மக்களூடாக இனி களவாட முடியாது. ஜோன்சன் பெர்னான்டோ, றொகான் ரத்தத்தைக்கு, அதிகாரத்தின் மூலம் மூலமாக அதன் மூலமாக இனிமேல் களவாட முடியாது. அவர்கள் நீதிக்கு முன்னால் வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இது ஆரம்பம் மாத்திரம்தான்.
இந்த மூன்று பேரும் மக்களின் அரசாங்கமாக மாறியிருக்கின்றனர் இந்த மூன்று பேரும் இந்த உண்மையான அரசாங்கமாக மாறும் இந்த மாட்டிலேயே அமைச்சரவை உருவாக்குவது வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு மலையக மலைய பிரதிநிதித்துவங்களுடன் உருவாகும் இதற்குப் பின்னர் இனவாதம் இல்லை யுத்தம் இல்லை மக்களிடம் உண்மைகள் மாத்திரம் தான் இருக்கும்.
அரச காரியாலயங்களில் ஜனாதிபதியின் உருவப்படம் பொறித்த புகைப்படங்கள் அமைந்திருக்கும். சந்திரிக்கா அம்மையார், மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவின், ஆகியோரின் படங்கள் இருந்தன. தற்போது எவருடைய படமும் இல்லை, கிரம உத்தியோகஸ்த்தர் காரியாலயம் தொடக்கம் உயர் நீதிமன்றம் வரைக்கும் ஜனாதிபதிகளின் படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. இப்போது அவ்வாறு படங்கள் இல்லை. என்பதற்கான காரணங்கள் என்ன அரச ஊழியர்களுக்கு அரச தலையீடு இல்லை என்பதை அறிந்திருக்கின்றார்கள்.
நீண்ட காலத்துக்கு பின்னர் நிதானமான ஒரு
நம்பிக்கையான சூழல் உருவாகி இருக்கின்றது. என்பதை மக்கள் உணருகின்றார்கள். இது ஒரு
மாதத்துக்குள் உருவாய் இருக்கின்றது. இந்த நம்பிக்கையாகும். தொடர்ச்சியாக இருக்கும்
ஒரு மாதமாக முன்னெடுத்து இருக்கின்ற இந்த அரசாங்கம் சரியாக 5 வருடங்கள் செய்யப்பட்டால்
இந்த நாட்டிலே மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் இந்த நாட்டை வளமான நாடாக அரசாங்கம்
மற்றும்.
மட்டக்களப்பில் பழைய அரசியல்வாதிகள் பழைய கதைகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் சொல்லுகின்றார் பாராளுமன்றசென்று எம்முடன் கைகோர்த்து கொள்வார் என கூறுகின்றார், எமது வேட்பாளர்களை விட அவருக்கு அனுரகுமார தோழரை அதிகளவு தெரியுமாம் என கூறுகின்றார். எமக்கு சிரிப்புத்தான் வருகின்றது. இவர் இதைவிட வேறொன்றும் கூற முடியாது. அவர் அனுரகுமார தோழரை தெரியுமாக இருந்தாலும் நண்பர்களுக்கு அரச அரசாங்கத்தில் இடமில்லை. தோழமைகளுக்கு பதவிகள் வழங்கப்படாது. மக்கள் தான் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்கள். மக்கள்தான் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் மட்டக்களப்பில் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றவர்கள்தான் எமது உறுப்பினர்கள்.
அனுரதோழரின் ஆசிர்வாதத்துடன், மட்டக்களப்பு
மாவட்டத்திலுள்ள எனது வேட்பாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் அவர்களைத் தெரிவு செய்ய
வேண்டியது மக்கள்தான். பழைய துன்பங்களை ஒதுக்கி விட்டு மக்களை ஏமாற்றியவர்களை ஒதுக்கிவிட்டு
புதிய தலைமைத்துவத்திற்காக திசைகாட்டிக்கு
வாக்களிக்க வேண்டும்.
வடக்கிலே வி.என்.ஏ ஊடாகவோ கிழக்கிலே முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவோ மலையாளத்தில் அவர்களின் சலுகை ஊடாகவோ எந்த டீலும் இல்லாமல் அவர் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார்.
நாங்கள் வடக்கில் சொல்வதும் கிழக்கில்
சொல்வதும் தென்பகுதியில் சொல்லும் இந்த மாற்றத்திற்காக வேண்டி வாக்களிக்குமாறுதான்
தெரிவித்திருந்தோம்.
மட்டக்களப்பு இருக்கின்ற பிள்ளையான் சொல்கிறார் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் எமக்கு வாகழித்தால் முஸ்லிம் நபர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார் என கூறுகின்றார் அதனால் தமிழர்களின் வாக்கை அவருக்கு கொடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றார். மட்டக்களப்பில் அதிகளவு தமிழ் வாக்குகள் இருக்கின்றன. அவர்கள்தான் அவர்களுடைய பிரதிநிதிகளை தீர்மானிக்க வேண்டும். அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் யார் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்று. அவ்வாறு எனில் தேர்தல் தேவையில்லை. இலகுவாக மக்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் அவ்வாறு முடியாது. அவர்களது அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது.
முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று தமிழர்கள் பாராளுமன்றம் செல்வதாக சொல்கிறார் கிஸ்புல்லா. நீங்கள் திசைகாட்டிக்கு வாக்குகளை கொடுப்பதால் பிரயோசனமில்லை எனவும் காத்தான்குடியில் கூறுகின்றார்.
மட்டக்களப்பில் பாராளுமன்றத்திற்கு 5 பேர் தெரிவு செய்யப்படுவதனால் தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு எமது கடசியிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். என கூறுகின்றேன் அதனை தீர்மானம் எடுப்பது மட்டக்களப்பிலுள்ள சாதாரண மக்கள்தான். முதல் தடவையாக மக்கள் நாடி பிடித்திருந்தார்கள் பிரபுக்களின் அரசியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மக்கள் ஜனாதிபதி தேர்தலில் நம் வழங்கிய தீர்ப்பு இன்று அதன் பிரதிபலிப்பை இன்று உணர்கின்றார்கள். 76 வருடங்களுக்குப் பின்னர் இந்த நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் மக்கள். கிழக்கு மாகாணமே வரலாற்றில் முக்கியமானதாக மாறும் , கருணா பிள்ளையான் இதனை யார் வந்தாலும் தடுக்க முடியாது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் இ.தவஞானசூரியம், திலிப்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment