11 Nov 2024

சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் நன்றியுணர்வுக்காக ஒன்று கூடல்.

SHARE

சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் நன்றியுணர்வுக்காக ஒன்று கூடல்.

சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் தமது கல்விப் புலமைக்காக கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்கள் ஆகியோருக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்காக ஒன்று கூடிய ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து ஆசிரியர்கள் அதிபர்களைக் கௌரவித்ததாக நன்றியுணர்வு ஒன்று கூடலின் ஏற்பாட்டாளரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகருமான ஏ.எல். முஹைதீன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அல்-அஷ்ஹர் பெண்கள் உயர் தரப்பாடசாலையில் 1983ஆம் ஆண்டின் முதலாம் வகுப்பு மாணவர்களால் ஞாயிறன்று 10.11.2024 இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

நிகழ்வில் அல்-அஷ்ஹர் பெண்கள் உயர் தரப்பாடசாலையில் கற்பித்து மரணித்தவர்களான ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் இறைஞ்சுதல் இடம்பெற்றதுடன் சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓய்வு நிலை  அதிபர்கள் ஆசிரியர்கள் பாராட்டி நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களது நீங்கா நினைவுகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 

இந்நிகழ்வில் தங்களுக்குக் கற்பித்த சுமார் 35 ஆசிரியர்கள் அதிபர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஆசிரியை எம்.எச். ஸவாஹிறா தெரிவித்தார். 

நன்றியுணர்வோடு வாழ்வோரை வாழ்த்தும் இந்நிகழ்வில் தாங்கள் நெகிழ்ந்து போனதாகவும் இது போன்ற கண்ணியப்படுத்தும் நிகழ்வுகள் ஓய்வு நிலையிலுள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோருக்கு மன  நிறைவையும் நிம்மதியையும் தரக் கூடியவை என்றும் இது ஒரு முன்மாதிரியாது என்றும்; அங்கு நிகழ்வில் அதிதிகளாளகக் கலந்து கொண்ட கல்வியாளர்களால் பாராட்டப்பட்டது. 

1974ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை ஏறாவூர் கோட்டக்கல்விப் பிரிவில் அதிக மாணவர்கள் கற்கும் பாடசாலையாக உள்ளது. தற்போது இப்பாடசாலையில் சுமார் 1500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர்.














SHARE

Author: verified_user

0 Comments: