9 Oct 2024

சுயேட்சை சின்னமாக இருந்த சங்கு சின்னம் தற்போது கட்சியின் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது. – மு.பா.உ சிறிநேசன் ஆதங்கம்.

SHARE

சுயேட்சை சின்னமாக இருந்த சங்கு சின்னம் தற்போது கட்சியின் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது. – மு.பா. சிறிநேசன் ஆதங்கம்.

ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் அவர்கள் சங்கு சின்னத்தில் அவர் போட்டியிட்டிருந்தார். தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி அவர் போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது அந்த சங்கு சின்னம் என்பது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது. 

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை மாலை(09.10.2024) களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. 

மக்கள் தற்போது தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் பொதுமக்கள் சபையானது ஜனாதிபதி தேர்தலின் போது சுயேச்சை சின்னமாகதான் அந்த சங்கு சின்னம் பயன்படுத்தப்பட்டது. இப்போது அந்த சங்கு சின்னம் என்பது ஒரு கட்சியின் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது.  அதாவது ஜனநாயகம் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தனது குத்து விளக்கு சின்னத்தை விட்டு விட்டு சங்கு சின்னத்தை எடுத்திருக்கின்றனர்.  

இந்த பொதுமக்கள் சபை சார்பாக நிறுத்தப்பட்ட அந்த தமிழ் வேட்பாளருக்கு ஒரு பகுதியினர் ஆதரவு அளித்தனர். இன்னுமொரு பகுதியில் இந்த தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு ஐக்கிய மக்கள் சக்தியை வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தனர். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துவிட்டது. இப்போது நாங்கள் சங்கு சின்னத்தையோ அல்லது தொலைபேசி சின்னத்தையோ பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. இப்போது நாங்கள் தமிழரசு கட்சியின் சார்பாக வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றோம். என்றால் தமிழ் மக்கள் தங்களுடைய தாய் கட்சியான தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட அந்த தமிழர்களின் தாய் கட்சி என்று சொல்லப்படுகின்ற தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் பொறுப்பாக இருக்கின்றது.

பொதுமக்கள் கட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட தமிழ் வேட்பாளரின் சின்னமாக இருந்த சங்கு சின்னம்  இப்போது ஒரு கட்சியின் சின்னமாக அதாவது குத்துவிளக்கில் சின்னமாக இருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது சங்கு சின்னத்தை எடுத்துள்ளது.  எனவே தமிழ் மக்கள் குழப்பம் அடையாமல் நீங்கள் இந்த முறை தமிழரசு கட்சி என்ற அடிப்படையில் நீங்கள் வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். 

இதில் குழப்பம் அடைய வேண்டாம் என்பதை மிகவும் அர்த்தம் சக்தியுடன் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.தமிழரசு கட்சி தமிழரசு கட்சியாகத்தான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது. 

இந்த நிலையில் தமிழரசு கட்சிக்காக பல விண்ணப்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அனுப்பப்பட்டிருந்தன அதில் 8 விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. நியமன குழுவினர் 8 விண்ணப்பங்களை தெரிவு செய்திருக்கின்றார்கள். இந்த நிலையில் எட்டுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்திருந்த நிலையிலும் அதில் தெரிவுகள் இடம்பெறாத நிலையில் வேட்பாளர்கள் வேறு கட்சிகளுக்கு வேறு சின்னங்களில் போட்டியிடக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றன. 

எது எப்படியாக இருந்தாலும் தமிழரசு கட்சியைப் பொறுத்தவரையில் சகல கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு இருக்கின்றது. இந்த தேர்தல் அவசர அவசரமாக ஏற்பட்டு ஒரு தேர்தல் என்று சொல்லலாம். ஜனாதிபதி தேர்தலை அடுத்து இந்த தேர்தல் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றதனால், பல கட்சிகளையும் இணைத்து செயல்படுகின்ற செயற்பாட்டில் அவர்களுடன் இணைக்கின்ற அந்த முயற்சியில் சில இழுப்பறிகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அவர்கள் தனித்துப் போட்டியிடுகின்ற போது அவர்களோடும் சில வேட்பாளர்கள் இணைந்திருக்கின்றார்கள். எனவே இனி வருகின்ற காலத்தில் சகல கட்சிகளும் இணைந்து பயணிக்க கூடிய விதத்தில் சகல கட்சிகளையும் இணைக்க வேண்டும் என்கின்ற பொது மக்களின் விருப்பம் இருக்கின்ற காரணத்தினால் அடுத்த தேர்தலுக்காக இந்த அனைத்து கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும். 

தற்போது தமிழரசு கட்சியைப் பலப்படுத்துவதன் மூலமாக தாய் கட்சியானது ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு செல்வதற்குரிய சந்தர்ப்பத்திலே நாங்கள் ஏற்படுத்த வேண்டும். என்னுடைய விருப்பமும் சகல கட்சிகளும் மீண்டும் இணைய வேண்டும் அதில் தனிப்பட்ட சில தன்முனைப்பு சிந்தனைகள் குறித்து நாங்கள் எல்லோரும் அடுத்த கட்டமாவது அடுத்த தேர்தலுக்காக வேண்டி ஒற்றுமையாக செயற்பட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. எனவே தமிழரசிக் கட்சியின் பலத்தின் ஊடாக ஏனைய கட்சிகளையும் அரவணைத்து செல்வதற்கான நடவடிக்கையில் எடுக்கப்படும் என்பதை கூறிக் கொள்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார். 




SHARE

Author: verified_user

0 Comments: