20 Oct 2024

மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள் - பிரபல சமூக சேவையாளரும் பாராளுமன்ற வேட்பாளருமான வசந்தாஜா.

SHARE

மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள் - பிரபல சமூக சேவையாளரும் பாராளுமன்ற வேட்பாளருமான வசந்தாஜா.     

மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள். பிரதிநிதிகள் மாற வேண்டும், கட்சிகள் மாற வேண்டும், நடவடிக்கைகள் மாற வேண்டும், என்ற நிலைமையை நான் மக்களிடையே அவதானிக்க முடிகின்றது. நானும் ஒரு  அரசியலுக்கு புதிய முகம் ஆனால் மக்களுக்கு பழைய முகம் மக்களே என்னை வரவேற்கின்ற நிலைமை இருக்கிறது. 

என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் முன்னாள் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி பார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடியில் செவ்வாய்கிழமை(15.10.2024) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாகு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

நீண்ட காலமாக நான் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றேன். இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவராக இருந்து போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவு உதவிகளை செய்திருந்தோம். அதேபோன்று சுனாமி காலத்திலும் மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை செய்திருக்கின்றோம். இந்த அனுபவங்களின் ஊடாக நாங்கள் பெற்ற அனுபவங்களை கொண்டு நடைபெற இருக்கின்ற அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ஈடுபடுவதற்கு நான் எனது அனுபவத்தை பாவிக்கலாம் என்ற வகையில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் சங்கு சின்னத்திலே போட்டியிடுகின்றேன். 

மட்டக்களப்பு வாழ் வாக்காளர் பெருமக்கள் எனக்கும் வாக்களிப்பார்கள் என நம்புகின்றேன். மக்களுக்கு உரிமை சார்ந்த விடயங்களிலும், அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும், வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விடயங்களிலும், ஒரு அங்கீகாரத்தோடு மக்களுக்கு உதவி செய்வதற்கு எனக்கு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 

சமூக சேவையிலிருந்து எங்களால் ஒரு அளவுக்கு மேலாக மக்களுக்கு சேவை செய்ய முடியாமலுள்ளது. அரசியல் அங்கீகாரம் கிடைக்கும் போது நாங்கள் பெருமளவு சேவையை செய்ய முடியும். அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன். அது மாத்திரம் இன்றி ஒரு அங்கீகாரமு இருக்கும். அதிகாரத்தோடு பயணிக்கின்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதனால் அரசியலுக்குள் வந்து மக்களுக்கு சேவை செய்யலாமென நம்பிக்கையோடு அரசியலுக்குள் வந்துள்ளேன். 

ஒரு சமூக சேவகன் அரசியலுக்கு வருவதை என்னைப் பொறுத்தளவில் எனது அனுபவத்தின் ஊடாக மக்கள் அதனை விரும்புவதை தெரிகின்றது. ஏனெனில் நான் பிரசாரத்திற்கு போகும்போது அனேகமான மக்கள் என்னை மிகவும் விருப்பத்தோடு வரவேற்கின்றார்கள், மிகவும் விருப்பத்தோடு என்னை ஆதரிக்கின்றார்கள், நீங்கள் நிச்சயமாக அரசியலுக்குள் வரவேண்டும் எங்களுக்கு உரிமை சார்ந்த விடயங்களிலும் அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் சேர்ந்து செயற்பட வேண்டி மக்கள் விரும்புகின்றார்கள் நிலைமை மட்டக்களப்பில் காணப்படுகின்றது. 

எங்களுடைய நாட்டைப் பொறுத்தளவில் கணக்கெடுப்பின் பிரகாரம் 8 வீதமான மக்கள்தான் வறுமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. போர் நிறுத்தப்பட்ட பின்னரும் கொரோனாவுக்கு பின்னரும் பார்க்கும்போது 20 வீதத்துக்கு மேலான மக்கள் வறுமையில் இருப்பதாக கணக்கெடுப்புகள் சொல்லப்படுவதாக நான் அறிகின்றேன். ஆகவே மக்கள் நிம்மதியாக தங்களது சுயமாக அவர்கள் வாழவேண்டுமாக இருந்தால் அவர்களுடைய வறுமை நீக்கப்பட வேண்டும். அதற்கான திட்டங்கள் நிச்சயமாக அரசினால் ஆக்கப்பட வேண்டும் அதேபோன்று மக்களும் தங்களை தாங்களே தயார்படுத்த கூடிய ஒரு முறைகளை அரசியலில் ஈடுபடுகின்ற பிரதிநிதிகள் ஏற்படுத்தி மக்களைதான் அவர்களது காலிலேயே நின்று செயல்படக்கூடிய திட்டங்களை நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கான திட்டங்களை நானும் செயல்படுவதற்கு மனதில் வைத்திருக்கின்றேன் இதனூடாக வறுமையை நீக்குவதற்கு பாடுபடலாம் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. 

மக்களுடன் நெருக்கமாக பழகுகின்றவன் என்ற அடிப்படையில் எனது அவதானத்தின்படி தமிழரசி கட்சி மீது மக்கள் காட்டுகின்ற ஒரு விருப்பம் மிகவும் குறைந்திருப்பதை என்னால் அவதானிக்க முடிகின்றது. மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள். பிரதிநிதிகள் மாற வேண்டும், கட்சிகள் மாற வேண்டும், நடவடிக்கைகள் மாற வேண்டும், என்ற நிலைமையை நான் மக்களிடையே அவதானிக்க முடிகின்றது. நானும் ஒரு  அரசியலுக்கு புதிய முகம் ஆனால் மக்களுக்கு பழைய முகம் மக்களே என்னை வரவேற்கின்ற நிலைமை இருக்கிறது. இருக்கின்ற கட்சிகளை மக்கள் வெறுக்கின்ற நிலைமையும் நான் அவதானித்து இருக்கின்றேன் புதிய முகங்களை மக்கள் வரவேற்பதையும் அவதானித்திருக்கின்றேன் என்றார்.



 

SHARE

Author: verified_user

0 Comments: