மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்திற்கு பாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு 11 மாதம் 14ஆம் தேதி இடம்பெற இருக்கின்ற பாராளுமன்ற பொது தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.
விடயம் தொடர்பில் புதன்கிழமை(23.10.2024) மாலை அவரிடம் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்....
இதன் பிரதானமான தபால் மூலமாக வாக்கு விநியோகம்
புதன் கிழமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலிருந்து இடம்பெற்றது.
மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14222 பேர் தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.
எனினும் 14003 பேருடைய தபால் மூல வாக்களிப்புக்காண விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு
அவர்களுக்கான தபால் மூலமாக வாக்குகள் புதன்கிழமை தபால் நிலையத்திற்கு பாரம் கொடுக்கப்
பட்டுள்ளது.
தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்வுடன் எதிர்வரும் இம்மாதம் மாதம் 30 ஆம் திகதி பொலிஸ்நிலையம், மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகத்திலும், அதுபோல் எதிர்வரும் 11 மாதம் முதலாம் மற்றும் நான்காம் திகதிகளிலும், ஏனைய அலுவலகங்களிலும், நான்காம் திகதி மேலதிகமாக பொலிஸ், மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகத்திலும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக வேண்டி எதிர்வரும் 11 மாதம் 7 ஆம் மற்றும் 8; திகதிகளில் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் தமது வாக்குகளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment