10 Oct 2024

புதிய அரசாங்கம் ஜனாதிபதியுடன் எதிர்காலத்தில் இணக்கப்பாட்டுடனான அரசியலை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் - பிள்ளையான்.

SHARE

புதிய அரசாங்கம் ஜனாதிபதியுடன் எதிர்காலத்தில் இணக்கப்பாட்டுடனான அரசியலை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் - பிள்ளையான்.

புதிய அரசாங்கம் ஜனாதிபதியுடன் எதிர்காலத்தில் ஒரு இணக்கப்பாட்டுடனான அரசியலை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம். மக்கள் நன் உணர்ந்து அதற்குரிய ஆதரவை எமக்குத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 

வியாழக்கிழமை(10.10.2024) பாராளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாகு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

எதிர்வரும் பாராளுமன்ற பொதுதேர்தலில் எமது கட்சி கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய வாக்குகளை பெறும் எனும் நம்பிக்கை எமக்கு உள்ளது. இது வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக கூட இருக்கலாம். மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய ஆசனங்களை பெறும் கட்சியாக எமது கட்சி காணப்படும். என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. 

கடந்த காலங்களிலும் மக்களின் ஆணை மூலம் அவர்களுக்குரிய அபிவிருத்தி உரிமை சார்ந்த விடயங்களை மிகவும் கவனமாக முன் எடுத்து வந்தோம். மக்களின் நம்பிக்கை பெற்றுள்ள காரணத்தினால் மக்களுக்குரிய அபிவிருத்திகளை முடியுமான அளவு முன்னெடுத்து வந்தோம். 

புதிய அரசாங்கம், மற்றும் ஜனாதிபதியுடனும், எதிர்காலத்தில் ஒரு இணக்கப்பாட்டுடனான அரசியலை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம். அவற்றையெல்லாம்  மக்கள் நன்கு உணர்ந்து அதற்குரிய ஆதரவை எமக்குத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: