இலங்கை தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், தேசிய ஜனநாயக முன்னணி, ஆகியன வேட்பு மனுக்கள் தாக்கல்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையிலான குழுவினர் வருகைதந்தனர். இதே போன்று ஈபிடிபி கட்சியின் சார்பில் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிவானந்தராஜா தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் க.பிரபு தலைமையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோன்று தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
அதேபோன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய்பட்டது. இம்முறை அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்திற்கு வரும் வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment