19 Oct 2024

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை மீண்ள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

SHARE

கொழும்புமட்டக்களப்பு ரயில் சேவை மீண்ள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும்  ரயில் சேவை சனிக்கிழமை(19.10.2024) காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதான அதிபர்.பேரின்பராஜா தெரிவித்துள்ளார்.

 கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை (19.10.2024) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ரயிலில் மோதியதால் சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 பொது மக்களின் நலன் கருதி புகையிரத  திணைக்களத்தினால் சேதமடைந்த பாதைகள் துரிதமாக புணரமைக்கப்பட்டதை அடுத்து சனிக்கிழம காலை சேவைகள் வழமை போல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதபோன்று  இரவு 8.15 க்கு புறப்பட உள்ள பாடுமின் புகையிரதமும் தேவைகள் வழமை போல் இடம்பெற உள்ளத்துடன் முட்பதிவு ஆசனங்கள் செய்தவர்கள் வழமை போல் தங்களது பிரயாணத்தை மேற்கொள்ள முடியும் எனவும், அதிகாலை 1.30 க்கு புறப்பட உள்ள புலத்திசி கடுகதி  சேவை மற்றும் இதர சேவைகளும் வழமை போல் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், வெள்ளிக்கிழமை (18.10.2024) இரவு பிரயாணம் செய்ய இருந்த பயணிகளுக்கான உட்பகுதிவு  கொடுப்பனவுகள் மீளவும் திரும்ப கையளிக்கப்பட உள்ளதாக புகையிரத நிலை அதிபர்  பேரின்ப ராஜா  ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை(18.10.2024) இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் ரயில் பாதை கடுமையாக சேதமடைந்ததுடன், ரயிலின் எரிபொருள் தாங்கிகள் கவிழ்ந்திருந்தன. இரண்டு காட்டு யானைகளும் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 



SHARE

Author: verified_user

0 Comments: