16 Oct 2024

வீட்டுச் சின்னத்தை சஜித் பிரேமதாசவின் கட்சியில் ஏற்றி வைத்திருந்தார்கள் - ஜனநாயகப் போராளிகள் கட்சி உபதலைவர் வேட்பாளர் நகுலேஸ்

SHARE

வீட்டுச் சின்னத்தை சஜித் பிரேமதாசவின் கட்சியில் ஏற்றி வைத்திருந்தார்கள் - ஜனநாயகப் போராளிகள் கட்சி உபதலைவர் வேட்பாளர் நகுலேஸ்.

கூட்டமைப்பிலிருந்து மூத்த உறுப்பினர்கள்கூட வெளியேறி விட்டார்கள். இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வீட்டுச் சின்னத்தை சஜித் பிரேமதாசவின் கட்சியில் ஏற்றி வைத்திருந்தார்கள். 

நாங்கள் கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு வந்தோம். ஆனாலும் அவர்கள் எமது கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ஆனால் இம்முறை போராளிகள் ஆகிய நாங்கள் வடகிழக்கிலே உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 போராளிகள் வீதம் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கி இருக்கின்றோம். எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை எங்களுக்கு தான் தெரியும். எனவே முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்து ஒரு சந்தர்ப்பத்தை தரவேண்டும். 

என மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் நா.நகுலேஷ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் செவ்வாய்க்கிழமை(15.10.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் ... 

இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சேர்ந்தவர்களுக்காக வேண்டி நாம் பரப்புரைகள் செய்து அவர்களை  பாராளுமன்றம் அனுப்பியுள்ளோம். அதை எமக்காக அன்றி எமது மக்களுக்காக வேண்டி வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்து பாராளுமன்ற உறுப்பினர்களையும், அரசியல்வாதிகளையும் உருவாக்கியுள்ளோம். அவர்கள் சுயநலமாக செயல்பட்டதன் காரணமாகத்தான் இம்முறை நாம் போராளிகளாகிய நாம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கத்துவ கட்சியாக நாம் இருக்கின்றோம். போராளிகளுக்குதான் போராளிகளின் வலிகள் தெரியும், மக்களின் வலிகள் தெரியும், நாங்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டது எனது மக்களின் உரிமைகளுக்கா.க போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு புனர்வாழ்வுகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு ஜனநாயக போராளிகள் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்துள்ளோம். எனது போராளிகள் அனைவருக்குமான கட்சிதான் இது. 

எனது கட்சி கடந்த 9 வருட காலமாக செயற்பட்டு வருகிறது. இம்முறை எமக்கு பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்குவதற்குரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. போராளிகளாகிய நாங்கள் பாராளுமன்ற தேர்தலிலே களமிறங்கி வெற்றி பெற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது. எனவே அன்புக்குரிய எனது முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இம்முறை எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள். உங்களுடைய பிள்ளைகள்தான் நாங்கள் உங்களுக்காகதான் நாங்கள் போராடி எங்களுடைய வாழ்க்கைகளை போராட்டத்துக்காக விட்டிருக்கின்றோம். இன்றும் நாம் உங்களுக்காகவே பணி செய்து வருகின்றோம். நீங்கள் எம்மை வெற்றிபெற வைப்பீர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் எனெனில் நாம் இதுவரை காலமும் கொண்டு வந்த அரசியல்வாதிகள் அனைவரும் சோரம் போய்விட்டார்கள். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது நான் களத்தில் நின்றேன். அவர்கள் தற்போது இல்லை நான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற ஒரு கூட்டமைப்பு உருவாக்கி அதில் சம அந்தஸ்தோடு எமது கட்சி செயற்பட்டு வருகின்றது. எனவே நமது மக்கள் சங்கு சின்னத்துக்கு வாக்களித்து எமக்கு ஆதரவழிப்பார்கள் என நம்புகின்றோம். இதற்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் உந்து சக்தியும் தேவையாக உள்ளது. 

கடந்த காலத்தில் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என எமது வலது குறைந்த முன்னாள் போராளிகள் அனைவரும் வீடு வீடாகச் சென்று பரப்புர செய்து அவர்களை வெற்றி பெற வைத்தோம். அப்போது நாங்கள் அவர்களிடம் எதையும் கேட்கவில்லை பாராளுமன்ற ஆசனங்களைகூட கேட்கவில்லை தமிழர்களுக்காக வேண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக வேண்டிதான் நாம் செயற்பட்டிருந்தோம். 

அவர்கள் மத்தியில் தலைமைத்துவ போட்டியும் தான்தோன்றித்தனமான முடிவுகளும் காணப்படுகின்றன. இதனால் கூட்டமைப்பிலிருந்து மூத்த உறுப்பினர்கள்கூட வெளியேறி விட்டார்கள். இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வீட்டுச் சின்னத்தை சஜித் பிரேமதாசவின் கட்சியில் ஏற்றி வைத்திருந்தார்கள். நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திலே பொது வேட்பாளர் களம் இறக்கி இருந்தோம் எனவே மக்களுக்கு தெரியும் யாரை ஒதுக்க வேண்டும் யாரை சேர்க்க வேண்டும் என நன்கு மக்கள் அறிந்துள்ளார்கள். யார் மக்களுக்காக பணிபுரிகின்றார்கள் யார் பதவிக்காக செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். எனவே நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நன்கு சிந்தித்து முடிவெடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். 

எனவே பார்வையாளராக இல்லாமல் போராளிகள் அனைவரும் களத்திற்கு வந்து எம்முடைய இணைந்து தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தை வெற்றி பெற வைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் பார்வையாளர்களாக இல்லாமல் நாமும் அரசியலில் களமிறங்கி ஜனநாயக ரீதியில் நமது மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். எமது போராளிகள் அமைப்பையும் பலப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் மக்களுக்காக போராடிய நாங்கள்தான் மக்களை தொடர்ந்தும் கவனிக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே அனைவரும் ஒன்றிணைமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: