7 Oct 2024

தூய அரசியலுக்காக மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடல்.

SHARE

தூய அரசியலுக்காக மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடல்.

இலங்கையில் நடைபெவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தூய அரசியலுக்காக தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களை பங்குபெற்றுதலை இளைஞர்களின் மேம்படுத்துவதற்கான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (07.10.2024) இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதத்தினை அதிகரித்தல், நிராகரிக்கப்படுகின்ற வாக்களிப் பினை எவ்வாறு தடுப்பது, பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தல், சம்பந்தமான கருத்துரைகளும்   முன்வைக்கப்பட்டதுடன்,  இதன்போது தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை அரசியல் பண்புகள் பற்றியும் இங்கு விரிவாக விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

இன்றைய தூய அரசியலுக்காக என்ற நிகழ்ச்சி திட்ட என்னும் விளக்க உரையை எஸ்.கோபிகாந்த் அவர்களும், நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் புதிய கருத்துரையை எஸ்.சொர்ணலிங்கம் அவர்களும்  அரசியலில் பெண்கள் பற்றிய விளக்க உரையை மார்ச் 12 இயக்கத்தின் திட்ட முகாமையாளர் ருக்ஷி பெனாண்டோ அவர்களும் வழங்கி வைத்தனர். 

இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மாவட்டத்தில் உள்ள ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 





SHARE

Author: verified_user

0 Comments: