வரலாற்றில் முதல் முறையாக 2023ம் கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2ம் இடத்திற்கு முன்னேறி சாதனை.
தேசிய மட்டத்தில் 6ஆம் இடத்தில் இருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியமை என்பது வரலாற்று சாதனை என்பதோடு இதற்கு மாணவர்களின் கடின உழைப்பும் கிழக்கு மாகாணத்தின் புதிய சிறந்த கல்வி கொள்கையுமே காரணம்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்த மாணவிகளைக் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகள் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 58 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான 9ஏ பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கொண்ட பாடசாலையாக பெருமையினை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை பெற்றுள்ளது. அத்தோடு 25- மாணவர்கள் 8ஏ பெற்றுள்ளதோடு, 13 மாணவர்கள் 7ஏ, சித்திகளையும் பெற்றுள்ளனர்.
வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை இடம்பெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வில் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கென்னடி மட்டக்களப்பு கல்வி வலய நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சாமினி ரவிராஜ், கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான நிதர்ஷனி மகேந்திரகுமார், மற்றும் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
இந்த மாணவர்களை பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம், பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment