ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் வாக்களித்தார்.
இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்றயதினம் சனிக்கிழமை திட்டமிட்டபடி இடம்பெற்றது.
காலை 7 மணிமுதல் நாட்டின் தலைவரைத் தேர்வு செய்வதற்காக தமது வாக்குகளைப் மக்கள் பதிவு செய்ததை அவதானிக்க முடிந்தது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மக்கள் அமைதியான முறையில் வாக்களித்தனர்.
இந்நிலையில் தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் அம்பிளாந்துறை முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயத்தில் தமது வாக்கினைப் பதிவு செய்தார்.
0 Comments:
Post a Comment